TamilSaaga

சிங்கப்பூர் அரசு பணியாளர்களுக்கு போனஸ்… 0.3 மாத சம்பளம் வழங்க அரசு அறிவிப்பு

பொதுச்சேவைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிங்கப்பூரில் அரசு பணியில் உள்ள பணியாளர்களுக்கு ஆண்டின் நடுப்பகுதி போனஸ் தொகையாக 0.3 மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சூப்பர் ஸ்கேல் நிலையில் உள்ள பணியாளர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல் ஆண்டின் நடுப்பகுதி போனஸ் வழங்கப்படவில்லை.

தற்போது சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி மீண்டு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும், உலக அளவிலான பொருளாதாரமும் மீட்சி அடையும் மற்றும் உள்நாட்டின் தடுப்பூசி திட்டம் முன்னேற்ற பாதை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுச்சேவை துறை தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் தான் அரசு பணியாளர்களுக்கு ஆண்டின் நடுப்பகுதி போனஸாக 0.3 மாத சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீனியர் தகுதி பணியாளர்களும் போனஸுடன் ஒரு முறை 350 முதல் 700 வெள்ளி பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts