TamilSaaga

“என்ன ஒரு நடிப்பு”.. மோசடியாளர்களிடம் 3,00,000 வெள்ளியை இழந்த மாணவர் : சிங்கப்பூர் போலீஸ் ஆய்வு

சிங்கப்பூரில் “உங்கள் தொலைபேசி எண், தொடர்ச்சியாக பல போலி செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பும் குற்றச்சாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்தின் தனிமைப்படுத்துதல் மைய அதிகாரியிடம் இருந்து வருவது போல ஒரு மாணவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இந்த ஆண்டு கடந்த ஜூலை 27ம் தேதியன்று குறிப்பிட்ட எண்ணிலிருந்து தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. சிங்கப்பூரில் தற்போது தங்கி படிக்கும் சீன நாட்டவரான திரு. ஜாங்கை என்பவருக்கு இந்த அழைப்புகள் வந்துள்ளது என்பதும், அவர் மீது கைது செய்வதற்கான உத்தரவு இருப்பதாகவும் அவர் நம்பும்படி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்துள்ளது. மூன்று வார காலம், ஷாங்காய் நகரில் இருந்து சட்டஒழுங்கு போலீஸ் அதிகாரிகளாக கூறிக்கொண்ட அந்த நபர்கள் இந்த மாணவரை தொடர்புகொண்டுள்ளனர்.

இப்படி பல அழைப்புகள் தொடர்ந்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் குழப்பமடைந்த அந்த மாணவர் இது போலியாக வரும் அழைப்புகளாக அல்லது உண்மையில் அவர்கள் ஷாங்காய் நகர அதிகாரிகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் வீடியோ கால் மூலம் பேசிய அவர்கள் அச்சு அசலாக போலீசார் போலவே உடை அணிந்திருந்தாகவும், அவர்கள் பேசிய இடம் காவல் நிலையம்போலவே காட்சியளித்ததாகவும் அந்த மாணவர் கூறினார்.

அந்த மாணவரிடம் இருந்து சுமார் 3,00,000 வெள்ளி மோசடி செய்த பிறகு தான் அந்த மாணவருக்கு தான் உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய மோசடியில் சிக்கியுள்ளதை அறிந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி விஷயங்கள் அம்பலமானது. சீனாவில் வசிக்கும் அவரது பெற்றோர் தங்களது மகனுக்கு ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்து திரு ஜாங்கின் அறை தோழருக்கு தொடர்புகொண்டுள்ளார். உடனடியாக சிங்கப்பூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு இந்த மோசடி ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளதாகவும், பணத்தை மீட்க முயற்சிப்பதாகவும் CNA-விடம் போலீசார் தெரிவித்துள்ளார்.

Related posts