TamilSaaga

சிங்கப்பூரில் S- பாஸில் இருக்கும் பொழுது வேற வேலைக்கு மாறினால் கவனமா இருங்க… “நேரம் எப்பொழுதும் கை கொடுக்காது”… ஏஜெண்டை நம்பி 8 லட்ச ரூபாய் இழந்தது தான் மிச்சம்!

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பல பேருடைய கனவு எப்படியாவது S-பாஸ் அல்லது E-பாஸ் வேண்டும் என்பதுதான். பல இளைஞர்கள் டிப்ளமோ முடித்துவிட்டு ஒரு மீட்டு வேலைக்கு வருவது நாள் s-பாஸ் என்பதுதான் அவர்களின் பிரதான கனவாக இருக்கும்.

அதற்காக சில பேர் திறமையாக யோசித்து ஆன்லைனில் வேலைக்கு அப்ளை செய்து சென்றாலும், ஏஜென்டிடம் பணம் கட்டி பல பேர் தற்பொழுது ஏமாந்து வருகின்றார்கள்.

எட்டு வருடமாக சிங்கப்பூரில் தனியார் துறையில் ஒர்க் பெர்மீட்டின் கீழ் வேலை பார்த்த ஒருவர் 4 லட்ச ரூபாய் ஏஜென்ட் பீஸ் கட்டி s-pass வேலைக்கு சேர்ந்தார். ஏற்கனவே டிரைவர் வேலை பார்த்து அவருக்கு புதிய கம்பெனியில் கிடைத்த வேலை டெக்னீசியன் வேலை ஆகும்.

ஏஜென்ட் சொன்னவாறு CV தயார் செய்து டெக்னீசியன் வேலைக்கு சென்றவரால் 6 மாதத்திற்கு மேல் அந்த வேலையில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே மீண்டும் டிரைவர் துறைக்கே செல்லலாம் என்று முடிவெடுத்து ஏஜன்டினை நோக்கி செல்கின்றார்.

எப்பொழுதும் நம் நேரம் நல்ல நேரமாக இருக்காது என்பதற்கு இந்த செயல்தான் எடுத்துக்காட்டு. டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யும் ஏஜென்ட் மறுபடியும் அவரிடம் 4 லட்சம் ரூபாய் கேட்கின்றார். ஏற்கனவே ஏஜென்டிடம் கொடுத்த பணத்தையே சம்பாதித்து முடிக்காத நிலையில் திரும்பவும் நான்கு லட்ச ரூபாயை நண்பர்களிடம் கடன் வாங்கி கொடுக்கின்றார்.

4 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிய ஏஜென்ட் வேலைக்கு நாளையே ஜாயின் பண்ண வேண்டும் என்று தலையில் இடியை தூக்கி போடுகின்றார். இதனை நம்பி எப்படி இருக்கின்ற வேலையை விடுவது என்று யோசிக்கும் வேளையில் அந்த வேலைக்கு வேற ஆளை எடுத்து விட்டார்கள் என்று மற்றொரு இடியை தூக்கி போடுகின்றார்.

நான் கட்டிய பணத்தை யாவது திரும்பிக் கொடுங்கள் என்று கேட்ட பொழுது வெறும் இருபதாயிரத்தை மட்டுமே திரும்ப கொடுத்து, மற்ற பணம் முழுவதும் உங்களது வேலைக்கான ப்ராசஸ் செய்வதற்கு கொடுக்கப்பட்டு விட்டது. எனக்கு மேலே மூணு ஏஜென்ட்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லி கையை கழுவி விட்டார்.

ஏற்கனவே வாங்கிய 4 லட்சத்திற்கான கடனை கட்டி முடிக்காத நிலையில், தற்போது மீண்டும் 4 லட்சம் கடன் வாங்கி சிங்கப்பூரில் ஏன் வேலை செய்கின்றோம் என்று தெரியாமலேயே சம்பளம் முழுவதையும் கடனாக கட்டிக் கொண்டிருக்கிறார் பெயர் சொல்ல விரும்பாத நம் நண்பர்.

எனவே வேலைக்கு ஏஜென்டிடம் பணம் கட்டும் நண்பர்களே ஒருமுறைக்கு 10 முறை யோசித்து புதிதாக வேலைக்கு அப்ளை செய்யுங்கள்.

Related posts