TamilSaaga

படிக்கட்டில் தரதரவென இழுத்துவரப்பட்ட சிறுமி? : சிங்கப்பூர் Towner சாலையில் கொடூரம் – 18 வயது நபர் கைது

சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் 21, 2021 அன்று டவுனர் சாலையில் உள்ள குடியிருப்புப் பிரிவில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைஞன் ஒருவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளன. அந்த நபர் மீது கடனாக நவம்பர் 25ம் தேதி, ஊடுருவல் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 25 அன்று ஷின் மின் டெய்லி நியூஸ் (SMDN) வெளியிட்ட தகவலின்படி, விசாரணைகளுக்கு உதவ அந்த நபரை ஒரு வாரம் காவலில் வைக்க அரசு தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : “விபத்தில் இறந்த தொழிலாளி ஆனந்தன்”

அவர் எதிர்வரும் டிசம்பர் 2, 2021 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளது. அந்த நபர் குறித்த கூடுதல் தகவல்களை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் அடையாளத்தை காக்கும் பொருட்டு நீதிமன்றம் வெளியிடவில்லை. மேற்குறிப்பிட்ட அந்த தாக்குதலுக்குப் பிறகு அந்த நபர் சிறுமியை தொடர்ந்து துன்புறுத்தியதாக SMDN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 23 முதல் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், படிக்கட்டு ஒன்றில் ஒரு ஆண் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் கைகளைப் பிடித்து இழுத்துச் செல்வதைக் காட்டியது. மேலும் அந்த காணொளியில் வந்தது இந்த வழக்கின் குற்றவாளி என்று கூறப்படும் அதே 18 வயது இளைஞன் என்று கூறப்படுகிறது.

மேலும் அந்த காணொளியில் சிறுமி சுயநினைவுடன் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், அந்த சிறுமி படிக்கட்டுகளில் இருந்து கீழே சரியும்போது அவளது முதுகின் ஒரு பகுதி தெரியுமளவுக்கு அவளது ஆடை இழுக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. சிறுமியை படிக்கட்டுக்கு கீழே இழுத்த பிறகு, அந்த நபர் சிரித்துக்கொண்டே கேமராவை நோக்கி ஓடியுள்ளார். இதனால் இந்த சம்பவத்தை மற்றொருவர் வீடியோ எடுத்ததும் தெரியவந்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

இந்த காணொளி வெளியான பிறகு அந்த 18 வயது நபர் மேலும் சில Minor பெண்களை சீரழித்துள்ளார் என்று கூறப்படுகிறது. போலீசாரின் அறிக்கையின்படி, இந்த குறிப்பிட்ட நபரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன என்று கூறியுள்ளனர்.

Related posts