TamilSaaga

சிங்கப்பூரில் வேலை தேடிக்கொண்டு இருக்கீங்களா… EPassல் உயர்த்தப்பட்ட சம்பளம்… என்னென்ன தகுதிகள் கேட்கப்படும்

சிங்கப்பூரில் வேலைக்காக ஏகப்பட்ட பாஸ்கள் நிலுவையில் இருக்கிறது. இந்த பாஸுக்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஏகப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் வேலைகள் ஒதுக்கப்படுகிறது. அந்த பாஸினை பெற்று சிங்கப்பூர் வந்து வேலை செய்வதே பெரிய போராட்டத்திற்கு பின்னர் தான் நடக்கிறது. இதில் வொர்க் பெர்மிட், SPass போன்ற வொர்க் பாஸ்கள் எல்லாம் கோட்டா அளவுகளின் கீழ் ஒதுக்கப்படுகிறது.

ஆனால் EPassக்கு சிங்கப்பூரில் கோட்டா அளவுகளும் கிடையாது. லெவியும் கிடையாது. இந்த பாஸில் சிங்கப்பூர் வர விரும்பும் ஊழியர்களுக்கு என்னென்ன தகுதிகள் கேட்கப்படும் என்பதை தெரிந்து கொண்டால் உங்களுடைய வேலைக்கான விண்ணப்ப செயல்முறைகளிலும் பிரச்னை இல்லாமல் இருக்கும்.

இதையும் படிங்க: வற்றாத நதியே காஞ்சி போய்ட்டா? சிங்கப்பூரின் MOM வெப்சைட் மீதே கை வைத்த தில்லாலங்கடி கும்பல்… விசா செக் செய்ய போற முன்னாடி இத செக் பண்ணிக்கோங்கோ!

நீங்கள் EPass அப்ளே செய்யும் போது,

  • உங்களுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்திருக்க வேண்டும்.
  • நிர்வாக அல்லது சிறப்புப் பணியில் வேலை செய்ய வேண்டும்.
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதிகள், பொதுவாக ஒரு நல்ல பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்று இருக்க வேண்டும். தொழில்முறை தகுதிகள் அல்லது சிறப்பு திறன்கள் இருக்க வேண்டும்.

இந்த பாஸில் வேலை சேர இருக்கும் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன் விபரம் பின்வறுமாறு:

பைனான்ஷியல் துறையை தவிர மற்ற துறை ஊழியர்களுக்கு 1 செப்டம்பர் 2023 முதல் சம்பளம் 5000 சிங்கப்பூர் டாலர்கள் கொடுக்க வேண்டும். இது படிப்படியாக உயர்த்தப்பட்டு 43 வயதில் அதிகபட்சமாக 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் சம்பளம் இருக்க வேண்டும். மேலும் புதுப்பிக்கப்படும் பாஸில் இருக்கும் ஊழியர்களுக்கு 2023 செப்டம்பர் 1க்குள் 4500 சிங்கப்பூர் டாலர்கள் கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு… S Pass வாங்க இதை Follow பண்ணுங்க..

இதுவே பைனான்ஷியல் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சம்பளமாக 5500 சிங்கப்பூர் டாலர்கள் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். அதுவே படிப்படியாக உயர்த்தப்பட்டு 43 வயதில் $11,500 கொடுக்கலாம். இதில் புதுப்பிக்கப்பட இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளமாக $5,000 சிங்கப்பூர் டாலர்கள் சம்பளம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.செப்டம்பர் 1, 2023 முதல், தகுதிச் சம்பளத்தைப் பெறுவதுடன், EPass விண்ணப்பிக்க இருப்பவர்கள் புள்ளிகள் அடிப்படையிலான Complementarity Assessment Framework (COMPASS) தேர்ச்சி பெற வேண்டும்.

மேலும், செப்டம்பர் 1, 2023 முதல், புதிய EP விண்ணப்பங்களில் MOMக்கு அறிவிக்கப்படும் தகுதிகள், MOM இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள background screening நிறுவனங்களின் சரிபார்ப்புச் சான்றுகளுடன் ஆதரிக்கப்பட வேண்டும். சிங்கப்பூர் அங்கீகரிக்காத நிறுவனங்களில் படித்தவர்களின் பாஸ் அப்ரூவ் செய்யப்பட மாட்டாது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு செல்ல இருக்கும் நபரா நீங்க… ஒரு நல்ல ஏஜென்ட் கண்டுபிடிக்க என்னென்ன செய்யணும்… ரொம்ப ரொம்ப முக்கியம் பாஸ் இது!

நீங்கள் விண்ணப்பிக்கும் முன் ஒரு விண்ணப்பதாரரின் தகுதியைச் சரிபார்க்க SAT கருவியைப் பயன்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தகுதியற்றவர் என்று SAT காட்டினால், நீங்கள் எம்ப்ளாய்மென்ட் பாஸுக்கு விண்ணப்பிக்கக் கூடாது, ஏனெனில் அது நிராகரிக்கப்படும். அதுவே, விண்ணப்பதாரர் தகுதியானவர் என்று SAT காட்டினால், விண்ணப்பம் தேர்ச்சி பெற 90% வாய்ப்பு உள்ளது என்பது உறுதி.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts