எப்போதுமே பெற்றோர்களுக்கு பிள்ளைகள் வாழ்க்கை தான் முக்கியம். எவ்வளவு பொறுப்பு இல்லாமல் இருந்த ஆண்மகன்கள் கூட குழந்தை பிறந்தவுடன் பொறுப்பான அப்பா ஸ்தானத்தினை கையில் எடுத்து விடுகிறார்கள். அவர்களை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பதையே வாழ்க்கையின் லட்சியமாக கூட நினைத்து ஓடும் அப்பாக்கள் தான் இங்கு நிறைய இருக்கிறார்கள்.
அவர்களுக்கு மகன்கள் சரியாக இருக்கிறார்களா எனக் கேட்டால் பல நேரங்களில் அதற்கு நோ என்ற பதில் தான் கிடைக்கிறது. சிலர் தான் உலகமே வியக்கும் அளவுக்கு சிறந்த மகனாக இருக்கிறார்கள். தங்கள் அப்பா ஆசையை செய்து அவர்களை என்றுமே சந்தோஷமாக வைத்து கொள்ளும் மகன்களும் இங்கு தான் இருக்கிறார்கள். அப்படி ஒரு அப்பாவின் சிறந்த மகனாக செய்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களினை ஆங்கிரமித்து இருக்கிறது.
இதையும் படிங்க: சிங்கை ஊழியர்களுக்கு 2023ல் வாவ் போட வைக்கும் நியூஸ்… வேலை தேடிக்கிட்டு இருக்கீங்களா? அப்போ உங்களுக்கும் தான் இந்த தித்திப்பான செய்தி!
தமிழ்நாட்டினை சேர்ந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தன்னுடைய மகன் பிரவீனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்காக தேடி அலைந்து சென்னையை சேர்ந்த சொர்ணமால்யா என்ற பெண்ணினை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இந்த ஜோடியின் திருமணம் வரும் 27ந் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் திடீரென ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் காலமாகி விட்டார்.
ஆனால் அவரின் கடைசி ஆசையான தனது திருமணத்தில் தந்தை இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு இருக்கிறார் பிரவீன். இதனால் தன்னுடைய குடும்பத்திலும், பெண் குடும்பத்திலும் பேசி இருக்கிறார். இரு தரப்பினருமே அவரின் ஆசையை நடத்தி வைக்கவே விரும்பி இருக்கின்றனர். உடனே பெண்ணும், மாப்பிள்ளையும் அளவான உடையில் தந்தையின் உடல் முன்னர் நிறுத்தப்பட்டனர். அவர் காலில் வணங்கிய பிரவீன் தாலியை அவர் கையில் தொட்டு கொடுத்து பெண்ணின் கழுத்தில் கட்டினார்.
இதையும் படிங்க: இனிக்க இனிக்க பேசிய ஏஜென்ட்… லட்சத்தினை வாங்கி அல்வா கொடுத்த சம்பவங்கள்… மொத்த காசை வாங்க இதான் ஒரே வழி! போராடினால் தான் முடியும்!
அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் பிரவீனால் சந்தோஷப்பட முடியாமல் கண்ணீர் சிந்தினார். இதை தொடர்ந்தே ராஜேந்திரனுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது. திருமணத்தால் மகிழ முடியாமல் அவரின் கடைசி ஊர்வலத்தில் உறவினர்கள் கண்ணீர் சிந்தி சென்ற காட்சி அங்கிருந்தவர்களை நிலைகுலைய செய்தது.