TamilSaaga

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள்.. உங்கள் Work Pass Status என்ன? – யாருடைய உதவியும் இல்லாமல் MOM மூலம் நீங்கள் கண்டறிய ஒரு எளிய வழி!

ஒரு வெளிநாட்டு ஊழியர் தாயகத்தை விட்டு வெளியே சென்று வேலை பார்க்க விரும்பும் நாடுகளின் பட்டியலில் எப்போதுமே சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கும். அதிலும் குறிப்பாக தமிழர்கள் பலர் சிங்கப்பூரை தங்கள் இரண்டாம் தாயகமாகத்தான் கருதுகின்றனர்.

காரணம், பிறநாட்டு தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் பாதுகாப்பு தான் பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை இங்கு வந்து வேலை பார்க்க தூண்டுகிறது. இந்நிலையில் ஏஜெண்டுகள் மூலமாக சிங்கப்பூர் வரும் சில தொழிலாளர்கள், ஒரு சில போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்படுவது இன்றளவும் நடந்து வருகின்றது.

சரி நீங்கள் வேலைக்காக அணுகும் ஏஜென்ட் உங்கள் வேலைக்காக அப்ளை செய்துள்ளாரா என்பதை IPA வந்தபிறகு நம்மால் எளிமையில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் IPA நம் கைக்கு வரும் முன்பே நமது வேலைக்கு அப்ளை செய்துள்ளார்களா? இல்லையா என்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

IPA என்றால் என்ன?

IP, IPA மற்றும் விசா என்று அதற்கு பல பெயர்கள் உண்டு, இந்த IPA இல்லாமல் எந்தவித பாஸ் மூலமும் நீங்கள் சிங்கப்பூர் வர முடியாது.

ஜோகூர்.. மலேசியர்களுக்கான மானிய எரிபொருளை பயன்படுத்தும் சிங்கப்பூர் வாகனங்கள்? தொடரும் சர்ச்சை.. இனி விதியை மீறினால் கடும் நடவடிக்கை

MOMன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவைப்பாடும் அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

இந்நிலையில் MOMன் குறிப்பிட்ட இந்த லிங்கை பயன்படுத்தி உள்ளே சென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பதுபோல ஒரு வெப் பேஜ் திறக்கும்.

அதன் பிறகு Check work pass and application statusஐ கிளிக் செய்து உள்ளே செல்லும்போது உங்களுக்கு விருப்பமான மொழியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். தமிழிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு உங்கள் Date of Birth மற்றும் பாஸ்போர்ட் நம்பரை பயன்படுத்தி உங்கள் வேலைக்கு Apply செய்யப்பட்டுள்ளதா? உங்கள் Application Status என்ன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த வகையில் உங்கள் பாஸ்போர்ட் நம்பரை வைத்து நீங்கள் எளிதில் பல தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

PENDING

நீங்கள் உங்கள் DOB மற்றும் பாஸ்போர்ட் எண்ணை பயன்படுத்தி உள்ளே செல்லும்போது Pending என்ற Status வந்தால் சிங்கப்பூர் உங்கள் வேலைக்கு MOMல் Apply செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆனால் உங்கள் தகவல்களை கொடுத்ததும் PENDING, INVALID மற்றும் VALID போன்ற இதுவே திரையில் தோன்றவில்லை என்றால் உங்கள் Application ஏஜென்ட்டால் விண்ணப்பிக்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

29 ஆண்டுக்கால “Ups & Down” திரைவாழ்க்கை.. சிங்கப்பூரை மையப்படுத்தி அஜித் மீது வைக்கப்பட்ட “ஒரேயொரு” குற்றச்சாட்டு – இன்னமும் தான் சொல்வது உண்மை என்று போராடும் தயாரிப்பாளர்

INVALID

உங்கள் Application INVALID என்று வந்தால் உங்கள் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம், உடனே நீங்கள் உங்கள் ஏஜென்ட்டை அணுகலாம்.

VALID என்று வந்தால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இந்த வகையில் நீங்கள் உங்கள் சிங்கப்பூர் வேலை பற்றி அறிந்துகொள்ளலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts