TamilSaaga

சிங்கப்பூரில் நல்ல சம்பளத்தில் வேலை தேடிட்டு இருக்கீங்களா? Skilled டெஸ்ட் அடிங்க… ஆனா இந்த துறை Choose பண்ணுறது தான் உங்க பர்ஸுக்கு பெஸ்ட்… சம்பளமும் தரமா இருக்கும்!

சிங்கப்பூரில் ஏமாறாமல் ஒரு வேலையை வாங்கிவிட்டால் பெரிய வெற்றி தான் என்ற நிலை தான் தற்போது இருக்கிறது. தெரியாத ஏஜென்ட் கையில் சிக்கி பல லட்சங்களை ஏமாந்தவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நல்ல வேலையை பெற்று சிங்கப்பூரில் வந்து செட்டில் ஆகி தொடர்ந்து சம்பளம் வாங்கி விட்டாலே அதுவே உங்களை வாழ்க்கையில் உயர்த்தி விடும்.

இப்படி இருக்கும் ஏகப்பட்ட பிரச்னைகளை தீர்க்கவும், தவிர்க்கவும் இருக்கும் மிக முக்கிய வாய்ப்பு தான் Skilled டெஸ்ட். இதில் இருக்கும் பல துறைகளில் ஒன்றினை தேர்வு செய்து 45 முதல் 60 நாட்கள் பயிற்சி எடுத்து டெஸ்ட் முடித்து பாஸாகி விட்டால் அந்த சான்றிதழை வைத்து ஒரு வேலையை தேடிக்கொள்ள முடியும். மற்ற பாஸ்களை விட இந்த வொர்க் பெர்மிட்டில் சிங்கப்பூர் வரும் போது நல்ல சம்பளத்துடன் வர முடியும். இலவச தங்குமிடம், பிடித்தம் எனவும் எதுவும் இருக்காது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை தேடிக்கொண்டு இருக்கீங்களா… EPassல் உயர்த்தப்பட்ட சம்பளம்… என்னென்ன தகுதிகள் கேட்கப்படும்

உங்களால் சிங்கப்பூரில் பல வருடம் தொடர்ந்து இருக்க முடியும். இந்த துறை சம்மந்தப்பட்ட கோர்ஸ் செய்யும் போது இன்னும் சம்பள உயர்வும் இருக்கும். மேலும் தாயகம் திரும்பிவிட்டு வேறு வேலைக்கு வரும் போது குறைந்தது ஒரு லட்சத்திற்குள் ஏஜென்ட் கட்டணம் இருக்கும். இதனால் நல்ல சம்பளமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் skilled testல் பல துறைகள் இருக்கிறது. இதில் கம்மியான கட்டணம் வாங்கும் படிப்பு என்வென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

skilled test அடித்து சிங்கப்பூர் சென்றால் spass மற்றும் ePassல் செல்லும் போது குறைந்தது 1 முதல் 1.5 லட்ச ரூபாய் கட்டணம் குறையும். முதலில், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பெரிய BCA அங்கீகாரமிக்க skilled இன்ஸ்ட்டியூட் சென்று அட்மிஷன் போடுங்கள். முதல் பணமாக சில ஆயிரங்கள் மட்டுமே கேட்பார்கள். இதனால் பணத்தினை நினைத்து நீங்கள் கவலைப்பட தேவையும் இல்லை. அங்கு நடத்தப்படும் ஒவ்வொரு கோர்ஸ்களுக்கும் வெவ்வேறு விதமான கட்டணங்கள் இருக்கும். skilled test படிப்பிலேயே காஸ்ட்லி என்றால் அது M & E துறையை தான்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு… S Pass வாங்க இதை Follow பண்ணுங்க..

M & E Tradeல் Thermal Insulation, Electrical Wiring Installation, Plumbing & pipe Fitting, Ducting Installation – AC ஆகிய படிப்புகள் இருக்கிறது. இந்த படிப்பில் ஒன்றினை படிப்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் இந்த படிப்புகளுக்கு இன்ஸ்ட்யூட்கள் கட்டணமும் அதிகமாக வாங்குவார்கள். இதைப்போன்றே, Pipe-Fitting, Precast Kerb & Drain Laying, Structural Steel Fitting, Welding ஆகிய படிப்புகள் civil துறையில் இருக்கிறது. இதற்கும் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் என்பதால் மற்ற படிப்புகளை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால், Future Proposed, Architectural Trade , Structural Trade ஆகிய துறைகளுக்கு இன்ஸ்டிட்யூட் கட்டணம் M&E துறை மற்றும் civil துறைகளை ஒப்பிடும் போது குறைவாக தான் இருக்கும். ஏறக்குறைய 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் கம்மியாக தான் வாங்குவார்கள். இதனால் இன்ஸ்டியூட்களுக்கு செல்லும்போது இதுகுறித்து தீர விசாரித்து கொள்ளுங்கள். இன்ஸ்டியூட் கட்டணத்தில் வித்தியாசங்கள் இருந்தாலும் இந்த துறைகளில் பயிற்சி பெற்று சிங்கப்பூர் வேலைக்கு வரும் ஊழியர்கள் அனைவருக்குமே சம்பளம் என்னவோ ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts