TamilSaaga

தடுப்பூசி போடாதவர்களுக்கு அதிக பாதிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை

சிங்கப்பூரில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கியிருக்கும் மக்களின் விடுதிகள், தொழில் செய்யும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் கடந்த 3 வாரங்களாக தீவிரமான கொரோனா பரிசோதனைகள் சமூக கண்காணிப்பு அடிப்படையில் நடத்தப்பட்டன.

இந்த சோதனையில் சுமார் 2,19,000 மாதிரிகளை எடுத்து பதிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சமூக அளவிலான தொற்றுக்கள் முந்தைய வாரத்தை விட கடந்த வாரம் அதிகமாக காணப்படுவதாகவும், முந்தைய தொடர்புகள் மூலம் கொரோனா பரவும் எண்ணிக்கையானது 4 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதே போல ஒரே குடும்பத்தில் வசிக்கும் குடும்பத்தினரால் பரவும் தொற்றும் குறைந்துள்ளது என்ற விவரங்களும் சொல்லப்பட்டன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 141 பேரை மருத்துவமனையில் சிகைச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 5 பேர் மட்டும் தீவிர சிகிச்வை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் கொரோனா தொற்றால் மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகலாம் மேலும் அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்து உயிர்வாயு சிகிச்சை அளிக்கும் தீவிர சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ சேவைக்கான இயக்குனர் டாக்டர் கென்னத் மாக் தெரிவித்துள்ளார்.

Related posts