TamilSaaga

சிங்கப்பூர்.. இவ்வாண்டு மட்டும் 30 பணியிட மரணங்கள்.. அதிக அளவிலான தொழிலாளர்கள் இறந்தது எப்படி? வெளியான புதிய புள்ளிவிவரம்

சிங்கப்பூரில் இந்த 2022ம் ஆண்டில் ஏற்பட்ட 30 பணியிட மரணங்களில், உயரத்தில் இருந்து விழுவதாலேயே அதிக அளவில் தொழிலாளர்கள் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கடந்த 7 மாதங்களில் இறந்த 30 தொழிலாளர்களில் 11 பேர் உயரத்தில் இருந்து விழுந்தே இறந்துள்ளனர்.

மேலும் அந்த 11 வழக்குகளில் ஏழு தொழிலாளர்கள் உயரத்தில் இருந்து விழுந்து இறந்தனர், மேலும் இருவர் கப்பல்களில் பணிபுரியும் போது கடலில் விழுந்து இறந்துள்ளனர். ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து இறந்துள்ளார் மற்றொருவர் பணியிடத்தில் தவறி விழுந்து இறந்துள்ளார்.

சிங்கப்பூர் பணியிட பாதுகாப்பு மன்றத்தால் இன்று வியாழக்கிழமை (ஜூலை 14) இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.

கடந்த 2016ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 42 தொழிலாளர்கள் இறந்ததற்குப் பிறகு, இந்த ஆண்டு தான் இந்த அளவிலான தொழிலாளர்கள் இறந்துள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் உயரத்தில் இருந்து விழுந்தே ஆகும், இதில் மேலே இருந்த பலகையில் இருந்து விழுந்து இறந்த புனரமைப்பு நிறுவனத்தின் உரிமையாளரும் அடங்குவார்.

சிங்கப்பூர் பிரதமருக்கு புருனே அரசின் மிக உயரிய விருது.. தடபுடலாக நடக்கவிருக்கும் பிறந்தநாள் விழா – புருனே செல்லும் சிங்கை அமைச்சர்கள்

பணியிட விபத்துகள் தொடர்பான விசாரணைகள் பெரும்பாலும் மனித தவறுகளை காரணம் காட்டினாலும், அவர்களை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுவது மிகவும் பயனுள்ளதாக இருக்காது என்று மனிதவள அமைச்சகத்தின் (MOM) தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவின் விசாரணைகள் மற்றும் ஆய்வாளர்களின் துணை இயக்குநர் திரு. கோ சின் கியோங் கூறினார்.

“இன்ஜினியரிங், டெக்னாலஜி மற்றும் டிசைன் மூலம் ஆபத்துக்களை அகற்றுவதற்கான வழிகளைப் பற்றி சிந்திப்பதும், பாதுகாப்புக்கான வடிவமைப்பு மூலம் இந்த அபாயத்தை அகற்றுவதும் முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts