TamilSaaga

Exclusive : Changi Airport-லிருந்து சென்னை புறப்பட வேண்டிய விமானம் – 16 மணி நேரத்துக்கும் மேலாக ஏர்போர்ட்டில் காத்திருக்கும் பயணிகள்

சிங்கப்பூர் தனது எல்லைகளை மீண்டும் முழுமையாக திறந்துள்ள நிலையில் பல நாடுகளை சேர்ந்த பயணிகள், குறிப்பாக தமிழர்கள் தற்போது வெகு சுலபமாக சிங்கப்பூர் வந்த செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் சிங்கப்பூர் தமிழகம் இருமார்கமாக பயணிகள் பயணிக்கும்போது கடந்த சில காலமாகவே பெரிய அளவில் காத்திருப்புக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவையில் தான் இந்த குளறுபடிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு புறப்படவிருந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானச் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 9.30 மணி நிலவரப்படி விமானம் இன்னும் புறப்படவில்லை.

சிங்கப்பூரில் இன்று காலை தலைப்புச் செய்தியில் வந்திருக்க வேண்டிய மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி.. தலைக்கு மேல் தொங்கும் தூக்கு கயிறு – கொஞ்சமாவது பயம் இருந்திருந்தால் 11 வருடங்களுக்கு முன்பு “அந்த” தவறை செய்திருப்பாரா?

இந்த தகவலை சிங்கப்பூர் தமிழ் முரசு வாசகர் ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாமதத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகள் சாங்கி விமான நிலையத்தில் பல மணி நேரமாகக் கால்கடுக்க காத்திருந்தனர்.

மோசமான வானிலை காரணமாக இந்த விமானம் தாமதமாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்தன. அதன் பிறகு நேற்று மாலை 5 மணிக்கு புறப்படவேண்டிய அந்த விமானம் இன்று காலை சிங்கப்பூர் நேரப்படி 10 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்களே இனி பார்த்து செலவு செய்யுங்கள்.. சிங்கப்பூரில் அதிகரிக்கும் பணவீக்கம் – மேலும் விலைவாசி உயர வாய்ப்பு!

ஆனால் தற்போது நமக்கு கிடைத்த சில Exclusive தகவல்களின் அடிப்படையில் இந்த விமானம் இறுதியில் Cancel செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சாங்கி விமானம் நிலையம் வந்த பயணிகள் 16 மணி நேரத்திற்கும் மேலாக காக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இறப்பு போன்ற மிக அவசர தேவைக்காக சிங்கப்பூரில் இருந்து சென்னை வர காத்திருந்த பயணிகள் சுமார் 16 மணிநேரம் காத்திருப்புக்கு பின் ஏமாற்றத்துடன் இன்னும் சாங்கி விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கின்றனர். அதிக விடுமுறை உள்ள வார இறுதி நாள் என்பதால் வேறு விமானங்கள் புக் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் பயணிகள்.

இதற்கான refund கிடைப்பதும் அவ்வளவு எளிதல்ல என்று கூறப்படுகிறது, கால்கடுக்க பல மணிநேரம் நின்றும் இறுதியில் பயணிக்க முடியாமல் போவது உண்மையில் கொடுமையின் உச்சம் என்றே கூறலாம்.

அரசிடம் இருந்து தனியார் வசம் மாறியுள்ள ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் அதிக திறன்பட செயல்பட்டால் பயணிகளுக்கு மிகுந்த ஆதரவாக இருக்கும் இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்

விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts