TamilSaaga

சிங்கப்பூரில் இன்று காலை தலைப்புச் செய்தியில் வந்திருக்க வேண்டிய மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி.. தலைக்கு மேல் தொங்கும் தூக்கு கயிறு – கொஞ்சமாவது பயம் இருந்திருந்தால் 11 வருடங்களுக்கு முன்பு “அந்த” தவறை செய்திருப்பாரா?

நேற்று முன்தினம் (ஏப்ரல்.27) போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய வாழ் தமிழர் நாகேந்திரன், சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டது நினைவிருக்கலாம். போதைப்பொருள் விவகாரத்தில் சிங்கப்பூர் எவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு பெரும் உதாரணமாக அமைந்தது.

இந்நிலையில், இதே போன்றதொரு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்கிலிடப்படவிருந்த மலேசிய வாழ் தமிழர் தட்சிணாமூர்த்தி, நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கையால் தனது தூக்கில் இருந்து தற்காலிகமாக தப்பியிருக்கிறார். இதனை நேற்றே நமது தமிழ் சாகா தளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இன்னும் சொல்லப்போனால், இன்று (ஏப்.29) காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவிருந்த தட்சிணாமூர்த்தி கடைசி நிமிடத்தில் தப்பியிருக்கிறார்.

மேலும் படிக்க – “அவர் சம்பாத்தியத்தில் தான் குடும்பமே நடக்குது”.. சிங்கப்பூரில் பண்டிகை நேரத்தில் பையை தொலைத்த ஓட்டுநர் – மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு

யார் இந்த தட்சிணாமூர்த்தி?

சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக தட்சிணாமூர்த்தி 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்று ஏபி நியூஸ் தெரிவிக்கிறது. 2011 ஜனவரியில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக கிட்டத்தட்ட 45 கிராம் ஹெராயின் கடத்தியதாக தட்சிணாமூர்த்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2015-ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், இந்த வழக்கில் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க தட்சிணாமூர்த்தி மிகக் கடுமையாக போராடி வருகிறார். அவர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தும், ஜனவரி 2016ல் அது நிராகரிக்கப்பட்டது. பிறகு அவர் தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்காக சிங்கப்பூர் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தார். ஜனாதிபதி அவரது கருணை மனுவுக்கு பதில் அளிக்க மூன்று ஆண்டுகள் ஆனது. எனினும், இறுதியாக தட்சிணாமூர்த்திக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது, இதனால் கருணை மறுக்கப்பட்டது. முதலில் அவரை இன்று (29 ஏப்ரல் 2022) தூக்கிலிட திட்டமிடப்பட்டது,

இந்த பரபரப்பான சூழலில் தான், தட்சிணாமூர்த்தி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மற்றொரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே AGC தட்சிணாமூர்த்தியின் மரண தண்டனையை திட்டமிட்டப்படி இன்று நிறைவேற்றக் கோரி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், ஏஜிசி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், கடைசி நிமிடத்தில் தனது தூக்கு தண்டனையில் இருந்து தற்காலிகமாக தப்பித்துள்ளார் தட்சிணாமூர்த்தி. ஆனால், அவரது தூக்கு தண்டனை உத்தரவு இன்னும் அப்படியே தான் உள்ளது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. வரும், மே 20ம் தேதி மீண்டும் இறுதி விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts