இந்த டிஜிட்டல் உலகில், குழந்தைகள் பெரியவர்களை விட தொழில்நுட்ப ரீதியாக advanced நிலையில் உள்ளனர் என்று கூறினால் அது சற்றும் மிகையல்ல. அப்பா அம்மாக்கு தெரியாமல் அவர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி தனக்கு வேண்டியதை வாகும் பல சுட்டி குழந்தைகளை பார்த்திருப்போம். ஆனால் இப்பொது பிரேசில் நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவன் இதெயெல்லாம் விட ஒரு படி மேலே சென்றுள்ளான் என்று தான் கூறவேண்டும். கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர் தூரத்தை LATAN விமான சேவை மூலம் இவன் பயணித்தது தற்போது உலககெங்கும் வைரலாகி உள்ளது. விமானத்தில் சிறுவர்கள் தனியே பயணிப்பது இயல்பு தான் என்றாலும் இந்த சிறுவன் பயணித்த முறைதான் இங்கு Highlight.
இமானுவேல் மார்க்வெஸ் ஒலிவேரா என்ற அந்த 9 வயது சிறுவன் கடந்த சனிக்கிழமை காலை பிரேசிலின் வடமேற்கு பகுதியில் உள்ள மனாஸில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தான். அவனது தாயார் டேனியல் மார்க்வெஸ், காலையில் எழுந்தபோது இமானுவேலை படுக்கையில் பார்த்ததாக செய்தியர்களிடம் கூறினார். ஆனால் ஒரு சில மணிநேரங்கள் கழித்து அவர் மீண்டும் சென்று பார்த்தபோது அவனது அறையில் அவன் இல்லை. உடனே திடுக்கிட அந்த தாய் வீடு முழுவதும் அவனை தேடி பார்த்துள்ளார்.
ஆனால் அந்த குறும்புக்கார சிறுவனோ அந்த நேரத்தில் உண்மையில் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாலோவில் உள்ள குவாருல்ஹோஸ் நகருக்கு செல்லும் LATAM விமானத்தில் ஏறியிருந்தான். தனது வீட்டில் இருந்து சுமார் 2700 கிலோமீட்டர் தூரம் பயணிக்க அந்த சுட்டிப்பையன் விமான டிக்கெட் கூட எடுக்கவில்லை என்பது தான் ஆச்சர்யத்தின் உச்சம். அட ஆமாங்க நீங்க வாசிச்சது உண்மை தான் அந்த சிறுவன் அவ்விமானத்தில் பயணிக்க டிக்கெட் கூட எடுக்கவில்லையாம். உள்ளூர் ஊடகங்கள் அளித்த தகவலின்படி “டிக்கெட் இல்லாமல் விமானத்தில் செல்வது எப்படி? மற்றும் யாராலும் கவனிக்கப்படாமல் விமான நிலையத்திற்குள் எப்படி போவது? என்பது குறித்து google செய்து, அதன் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவன் அப்படி செய்துள்ளான் என்று கூறப்படுகிறது.
குறும்புத்தனம் செய்திருந்தாலும் தன் மகன் இருக்கும் இடத்தை அறிந்ததும், கலங்கிய தாய் நிம்மதி பெருமூச்சு விட்டார். மனாஸ் விமான நிலைய நிர்வாகம், பயண ஆவணங்கள் அல்லது Luggage இல்லாமல் சிறுவன் எப்படி விமானத்தில் ஏற முடிந்தது என்பதை அறிய இந்த முழு விஷயத்தையும் தீவிரமாக விசாரிக்க துவங்கியுள்ளனர். உள்ளூர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர் மற்றும் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பு கேமரா காட்சிகளை அவர்கள் சோதிக்கவுள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, குடுபத்திற்கு பயந்து அந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்யவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
அந்த ஊர் முழுக்க இந்த சுட்டி பையனின் செயல் காட்டுத்தீயாக பரவ, தற்போது பல்வேறு ஊடகங்கள் அவன் வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.