TamilSaaga

புலம்பெயர் தொழிலாளர்களே இனி பார்த்து செலவு செய்யுங்கள்.. சிங்கப்பூரில் அதிகரிக்கும் பணவீக்கம் – மேலும் விலைவாசி உயர வாய்ப்பு!

சிங்கப்பூரில் முக்கிய பணவீக்கம் வரவிருக்கும் மாதங்களில் “கடுமையாக அதிகரிக்கும்” மற்றும் 2022ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உச்சத்தை எட்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) அதன் அரையாண்டு மேக்ரோ பொருளாதார மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபரில் MASன் மதிப்பாய்வுக்குப் பிறகு, உலகளாவிய மாற்றங்கள், குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் மோதல்கள், பணவீக்கக் கண்ணோட்டத்தை மோசமாக்கியுள்ளன என்று MAS கூறியது. இதனால் சிங்கப்பூரில் விலைவாசி அதிகரிக்கும் மற்றும் “சிறிது காலத்திற்கு உச்சத்தில் இருக்கும்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2022ம் ஆண்டில், முக்கிய பணவீக்கம் என்பது 2.5 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து, ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து விநியோகம் குறைவதால் உரச் (Fertilizer) செலவுகளும் அதிகரித்துள்ளன, இது உலகளவில் விவசாய விளைச்சலைக் குறைக்க வழிவகுக்கும்.

சிங்கப்பூர் நிறுவனங்கள் இதுவரை தங்கள் லாப வரம்பிற்குள் சில செலவு மாற்றங்களை தற்காலிகமாக செய்துகொள்ள முடிந்துள்ளது. ஆனால் உலகளாவிய உணவு விலைகளின் தொடர் அதிகரிப்பு உள்நாட்டு உணவு விலைகளில் பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்றும் ஆணையம் கூறியது.

சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழருக்கு நடந்த கொடூர விபத்து – எத்தனை கோடி கொடுத்தாலும் போன உயிர் திரும்ப வராது!

“உலகளவில் உயர்ந்துள்ள உணவுப் பொருட்களின் விலைகள், 2022க்கு அப்பாலும்கூட சிங்கப்பூரின் உணவுப் பணவீக்கத்தில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.” உணவு மற்றும் குளிர்பானத் துறையைப் பொறுத்தவரை, விலைகள் மீதான அழுத்தம் என்பது மூன்று தரப்பிலிருந்து வருகிறது. மூலப்பொருட்கள், பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் தொழிலாளர் செலவுகள் தான் அவை.

சிங்கப்பூர் Orchard Towers.. குடிபோதையில் சுற்றித்திரிந்த “வெளிநாட்டு மங்கை” – பெண் போலீஸ் அதிகாரியை வசைபாடினால் சும்மா விடுவார்களா?

ஆகவே இனி சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள், ஏற்கனவே சிங்கப்பூரில் வசித்து வேலை செய்து குடும்பத்தை காக்கும் தொழிலாளர்கள் தங்கள் செலவுகளை கூடிய அளவில் குறைத்துக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே உங்களால் ஓரளவு பணத்தை மிச்சம்பிடிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts