TamilSaaga

Exclusive : காலை 10 மணிக்கு திருச்சியில் புறப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் – இரவு 10 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்கிய அவலம் – மலேசியா வரை சென்று வந்த பயணிகள்!

சிங்கப்பூர் தமிழகம் என்று இரு மார்க்கமாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மிக சிறந்த விமான சேவை நிறுவனங்களில் ஒன்று தான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். ஆனால் கடந்த சில மாதங்களாக, குறிப்பாக நிறுவனம் தனியார் கைவசம் சென்றதிலிருந்து விமானம் புறப்படும் நேரங்களில் பல குளறுபடிகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. திருச்சியில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் காலை 10 மணிக்கு புறப்பட்டது.

அதேபோல இந்த விமானம் சிங்கப்பூரில் மாலை 4 மணி அளவில் தரை இறங்க இருந்த நிலையில் சிங்கப்பூர் நேரப்படி சற்று தாமதமாக மாலை 4.38 மணிக்கு விமானம் சிங்கப்பூரில் தரை இறங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் விமானம் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு தரையிறங்கவில்லை.

Exclusive : Changi Airport-லிருந்து சென்னை புறப்பட வேண்டிய விமானம் – 16 மணி நேரத்துக்கும் மேலாக ஏர்போர்ட்டில் காத்திருக்கும் பயணிகள்

சிங்கப்பூரில் தரையிறங்கவேண்டிய விமானம் மலேசியாவின் கோலாலம்பூர் வரை சென்று வானிலேயே பல மணி நேரம் வட்டமிட்டுள்ளது. உண்மையில் விமானத்தில் பயணித்த பயணிகள் மனநிலை அந்த நேரத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

சுமார் ஐந்து மணி நேர 5 மணி நேரமாக KL பகுதியில் விண்ணிலே வட்டமிட்ட நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் அந்த விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது. திருச்சியில் காலை 10 மணிக்கு எடுக்கப்பட்ட விமானம் சிங்கப்பூரில் இரவு 10 மணிக்கு தரையிறக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் பயணிகளுக்கு மிகப்பெரிய சிரமத்தையும் ஒருவிதமான பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

அவசர தேவைக்காக மக்கள் விமானங்களை பயன்படுத்துகின்றனர், ஆனால் இப்படி பல மணி நேரம் அலைக்கழிக்கப்படுவது உண்மையில் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts