TamilSaaga

“இந்த முழு நாடும் கொரோனாவோடு போராடுகிறது” – ஆமா இந்த வாய்ஸுக்கு சொந்தக்காரங்க யாருனு உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவுல இருக்க, குறிப்பா தமிழ்நாட்டுல இருக்க ஒருத்தருக்கு நீங்க போன் பண்ணா… `இந்த முழு நாடும் கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 உடன் போராடுகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள் நாம் நோயுடன் போராட வேண்டும்; நோயாளியுடன் அல்ல. யாரிடமும் பாகுபாடு காட்டாதீர்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த நோயிலிருந்து பாதுகாக்க உதவும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், போலீஸ் போன்றோரை மதிப்புடன் நடத்துங்கள்; முழு ஒத்துழைப்பு தாருங்கள். இந்த செயல் வீரர்களைப் பாதுகாப்போம். இதனால், இந்த தேசம் கொரோனாவை வெற்றி கொள்ளும். மேலும், விவரங்களுக்கு மாநில ஹெல்ப்லைன் எண் – 104 அல்லது மத்திய ஹெல்ப்லைன் 1075-ஐத் தொடர்பு கொள்ளவும். இந்திய அரசின் பொதுநல வெளியீடு’ என்ற ரெக்கார்டட் வாய்ஸ் ஒலிப்பதைக் கேட்டிருப்பீர்கள்.

“விளையாட்டை வைத்தும் உதவ முடியும்” – சிங்கப்பூரின் `Find Your Way’ திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கவிதா முருகேசன்

கொரோனா முதல் லாக்டவுன் போடப்பட்ட நேரத்தில் தீடிரென போன் ரிங்டோனுக்குப் பதிலாக இந்த வாய்ஸ் ஒலிப்பது நடைமுறையானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஒலிக்கும் இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா… இதுதவிர, `நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் பிஸியாக இருக்கிறார். சிறிது நேரம் கழித்து அழைக்கவும். The customer you have been called is busy. Please try after some time’ என்ற குரலையும் நீங்கள் கேட்டிருக்கலாம். இந்த கொஞ்சும் குரலுக்குச் சொந்தக்காரங்க யார் தெரியுமா.. அவங்க பேரு கவிதா முருகேசன். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவங்க, பல தடைகளைத் தாண்டி வெளிச்சத்துக்கு வந்துருக்காங்க..

முதல்ல லோக்கல் சேனல்களில் விளம்பரம், செய்திகள் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறார் கவிதா. தொடர்ச்சியாகப் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அந்த டெலிபோன் ரெக்கார்டட் வாய்ஸுக்கான ஆடிஷனில் கலந்துகொண்டிருக்கிறார். எத்தனையோ ஆயிரம் பேர் கலந்துகொண்ட அந்த ஆடிஷனில் தனது குரல் தேர்வு செய்யப்படுமா என்ற சந்தேகம் இவருக்கு ஆரம்பத்தில் இருந்திருக்கிறது. ஆனால், திடீரென ஒரு நாள் போனில் தனது குரல் ரெக்கார்டட் வாய்ஸாக ஒலிப்பதைக் கேட்ட கவிதாவுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாகியிருக்கிறது. அதையடுத்து, தொடர்ச்சியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் விளம்பரங்களுக்குக் குரல் கொடுக்கும் வாய்ப்புகள் தேடி வந்திருக்கிறது.

திருப்பம் தந்த டிக்டாக்!

போனில் ஒலிக்கும் அந்தக் குரலுக்கு உண்மையில் யார் சொந்தக்காரர் என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்த சமயம், தான் குரல் கொடுத்தவைகளை ரெக்கார்ட் செய்து டிக்டாக்கில் வீடியோவாகப் பதிவிடத் தொடங்கியிருக்கிறார். ஒரு வீடியோ அல்லது டிரெண்டான பாடல் வைரலாவது வழக்கமான ஒன்று. ஆனால், விளம்பரம் அல்லது ரெக்கார்டட் வாய்ஸின் வீடியோ வைரலானது அதுவே முதல்முறை என்கிறார் கவிதா. அதைத் தொடர்ந்து ஒருபுறம் பாரட்டுகள் வந்தாலும், மறுபுறம் இவங்க ரொம்ப வயசானவங்களா இருக்காங்க’,குழந்தைகளைப் பாத்துக்குற வேலைலாம் இவங்களுக்கு இல்லையா’, `உனக்கு இதெல்லாம் தேவைதானா?’ போன்ற விமர்சனங்களால் நிலைகுலைந்து போயிருக்கிறார். ஆனால், தனது கணவர் கொடுத்த ஊக்கத்தால், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். அந்த வீடியோக்கள் அதிரிபுதிரி வைரலானது, இவருக்கு வெளிநாடுகளில் இருந்தும் பல வாய்ப்புகளைக் கொண்டுவந்திருக்கிறது.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான கவிதாவின் வாய்ஸ் போன் ரெக்கார்டட் வாய்ஸாக மட்டுமே ஒலிக்கவில்லை. நாம் அடிக்கடி கேட்கும் ரயில் நிலையங்களில் அறிவிப்பு குரலும் பல இடங்களில் இவரின் குரலாகவே ஒலிக்கிறது…வண்டி எண்...’ எனத் தொடங்கும் ரயில் நிலைய அறிவிப்புகள் தொடங்கி உள்ளூர் பிராண்ட், உலக பிராண்ட் வரை விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். தொடர்ச்சியாக டப்பிங் ஸ்டூடியோக்களில் வாய்ப்புத் தேடி வரும் கவிதாவின் குடும்பம், புதிய வாய்ப்புகளுக்காக ஈரோட்டில் இருந்து சென்னைக்கே குடிபெயர்ந்திருக்கிறது.சாதிக்க ஏது வயது’ என்று நம்பிக்கையோடு பேசும் இவரை, `வைரல் வீடியோவால பல பிரச்னைகள் வரும். அந்த வீடியோவை எல்லாம் அழிச்சுடு’ என்ற மிரட்டல்களையும் எதிர்க்கொண்டிருக்கிறார்.

ஹாங்காங் எடுத்த “அந்த முடிவு” : சிங்கப்பூர் விமான நிலையங்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் – ஒரு Complete Analysis

ஆனால், ஒரு பாட்டு, ஒரு டான்ஸுக்கு வரவேற்பு கிடைக்கும்போது... விளம்பரங்களுக்குக் குரலாக இருப்பவர்களின் வீடியோ வைரலானது அதுதான் முதல்முறை’ என்ற நம்பிக்கை வார்த்தைகள் கரைசேர்த்திருக்கின்றன. ஃபேஸ்புக்கிலும் ரசிகர்கள் குவியவே, விமர்சனங்களுக்கெல்லாம் அவர்களே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பார்த்து அவரது கணவர்,உன்னோட ரசிகர்களுக்கிடையே சண்டையைப் பாரு’ என்று கிண்டலாகச் சொல்வதை ரசிக்கிறார் கவிதா…

நம்பிக்கையோடு அடுத்தகட்ட முயற்சியைத் தொடரும் கவிதா முருகேசனை நாமும் வாழ்த்துவோம். வாழ்த்துகள் கவிதா..!

Content and Image Source : Behindwoods

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts