நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் பெரும்பாலான மத்திய நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் நேற்று செவ்வாய்கிழமை (நவம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெரும்பாலான நாட்களில் மதிய நேரத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் குறுகிய கால மிதமானது முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை சேவை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : நவம்பர் மாதம் முதல் பாதியில் நல்ல மழை
“மேலும் சில நாட்களில் இடியுடன் கூடிய மழை, மாலை நேரம் வரை நீடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரின் சுற்றுவட்டாரப் பகுதியைச் சுற்றி தற்போதுள்ள காற்று குவிவதால், ஓரிரு நாட்களில் இடியுடன் கூடிய மழை வலுவாக இருக்கும்,” என்று ஆய்வு மையம் மேலும் கூறியது. பொதுமக்கள் “பரவலான இடியுடன் கூடிய மழை” மற்றும் விடியலுக்கு முந்தைய நேரத்திற்கும் காலைக்கும் இடையில் பலத்த காற்றையும் எதிர்பார்க்கலாம்.
தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/saagatamil
“அதே போல நவம்பர் 2021ன் இரண்டாம் பாதியானது முதல் பாதியை போன்ற ஈரமான சீர்தோஷம் கொண்டதாக இருக்காது என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதத்திற்கான ஒட்டுமொத்த மழைப்பொழிவு சராசரியை விட அதிகமாக இருக்கும்” என்று வானிலைச் சேவை கூறியது.
நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மேக மூட்டம் குறைவாக இருக்கும் சில நாட்களில் இது சுமார் 34 டிகிரி செல்சியஸை எட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.