TamilSaaga

“சிங்கப்பூர் மக்களே உஷார்” : எதிர்வரும் 15 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சிங்கப்பூரில் அடுத்த பதினைந்து நாட்களுக்கு ஈரமான வானிலையே தீவு முழுவதும் பரவலாக நிலவும் என்று வானிலை ஆய்வாளர் நேற்று திங்கள்கிழமை (நவம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில் கூறினார். இந்த காலகட்டத்தில், பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது, சில நாட்களில் மாலை வரை இந்த மழை நீடிக்கும் என்றும் ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு காரணமாக, சில நாட்களில் பரவலாக மிதமானது முதல் கனமான மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு சில நாட்களில் காலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும். நவம்பர் முதல் பாதியில் மொத்த மழைப்பொழிவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பதினைந்து நாட்களில் பெரும்பாலான நாட்களில், தினசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : அக்டோபர் மாதத்தின் இரண்டாம் பாதியில் மழை

அதே சமயத்தில் பெரும்பாலான நாட்களில் மழை பெய்தாலும், தினசரி அதிகபட்ச வெப்பநிலை இன்னும் சில நாட்களுக்கு 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இந்த பதினைந்து நாட்களில், தினசரி அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸுடன் சற்று குளிரான வெப்பநிலையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்திற்கான ஈரமான வானிலை முன்னறிவிப்பு அக்டோபர் மாதத்தைத் தொடர்ந்து, பெரும்பாலான நாட்களில் தீவின் சில பகுதிகளில் காலை மற்றும் பிற்பகலில் குறுகிய கால இடியுடன் கூடிய மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts