TamilSaaga

கூட்டம் நிறைந்த சிங்கப்பூர் சாலை.. காட்டுப்பன்றி தாக்கியதில் 15 நிமிடம் ரோட்டில் கிடந்த பெண் – தொடர்ந்து நடந்த அட்டகாசம்!

சிங்கப்பூரின் Yishun பகுதியில் பொதுவெளியில் சுற்றித்திரிந்த ஒரு காட்டுப்பன்றி அங்கிருந்த பெண் ஒருவர் மீது பாய்ந்துள்ளது. கட்டுப்பன்றியால் தாக்கப்பட்ட அந்த பெண்மணி சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக தரையில் அசைவின்றி கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதிப் சென்ட்ரலில் உள்ள பிளாக் 846 Yishun ரிங் ரோடுக்கு முன்னால் உள்ள நெரிசலான திறந்தவெளியில் நேற்று மார்ச் 9 அன்று மாலை 6:40 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிங்கையின் பலமே இதுதான்.. உண்மையில் ரஷ்யாவிற்கு சிங்கப்பூர் வைத்த “செக்” – மாஸ்டர் ஸ்ட்ரோக்!

அந்த பகுதியில் துணிகளை விற்பனை செய்துகொண்டிருந்த பெண் ஒருவர் சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார். ஷின் மின் டெய்லி நியூஸிடம் அவர் அளித்த தகவலின்படி “காட்டுப்பன்றியால் தாக்கப்பட்ட பிறகு அந்தப் பெண்ணைப் காப்பாற்ற சென்றதாக அவர் கூறினார். “அந்த காட்டுப்பன்றிக்கு மிக நீளமான தந்தங்கள் இருந்தன என்றும், அது அளவில் பெரிதாக இருந்தது என்றும் அவர் கூறினார். “அந்தப் பெண் தரையில் விழுந்த உடனே, அருகில் இருந்த பொதுமக்கள் உதவ முன்வந்தனர் என்றும், நான் அவசரமாக எனது தொலைபேசியை எடுத்து 995ஐ டயல் செய்தேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சம்பவத்தின்போது அந்த பெண் அருகில் ஒரு சிறுமி இருந்ததாக நேரில் பார்த்தவர் கூறினார். பன்றியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிறுமி, அந்தப் பெண்ணின் அருகில் நின்று அழுதுகொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. நெரிசலான அந்த காதிப் சென்ட்ரல் பகுதியில் இவ்வளவு பெரிய காட்டுப்பன்றி எப்படி வந்தது என்பது குறித்து ஷின் மின் தகவல் ஏதும் அளிக்கவில்லை.

அந்த பெண் மீது மோதிய பின்னர் அந்த காட்டுப்பன்றி அங்கிருந்து ஓடியதாகவும், பின் அது அருகிலுள்ள ஆப்டிகல் கடை ஒன்றின் கண்ணாடி கதவைத் இடித்து சென்றது என்று சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் கூறினார். நல்வாய்ப்பாக அந்த மோதலில் கடைக்கும் கண்ணாடிக்கும் எந்தவித சேதமும் நடக்கவில்லை. காட்டுப்பன்றியின் இந்த செயலை கண்டு அஞ்சிய மக்கள் அங்குமிங்கும் ஓட அதுவும் செய்தவறியது அங்கு திரிந்துள்ளது.

சிங்கப்பூரில் லாரியில் பயணிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் – வரப்பிரசாதமாய் வரும் புதிய Rules!

அடுத்தபடியாக ஒரு காப்பி கடை மீது மோதிய அந்த பன்றி இறுதியில் எங்கு சென்றது என்பது தெரியவில்லை, சம்பவம் குறித்து அறிந்த சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை விரைந்து அங்கு வந்து அந்த பெண்ணை மீட்டனர். சிகிச்சைக்காக Khoo Teck Puat மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts