TamilSaaga

“சிங்கப்பூர் VTL பாதை” : இந்திய குடிமக்கள் மகிழ்ச்சி – விமானங்களுக்கான தேவை அதிகரிப்பைக் காணும் முகவர்கள்

உலக அளவில் இந்த பெருந்தொற்று நோயின் தாக்கம் சில நாடுகளில் அதிகரித்தவண்ணம் உள்ள நிலையில் அண்டை நாடான இந்தியா மற்றும் இந்தோனேசிய போன்ற நாடுகளில் தொற்றின் அளவு தொடர்ந்து குறைந்து வருகின்றது. மேலும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் தடுப்பூசி விகிதமும் அதிகரித்து வருவதால் தற்போது நமது சிங்கப்பூர் அரசு 21 நாடுகளுக்கு தன்னுடைய தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தனிமைப்படுத்துதல் இல்லாத பயண பாதையை திறந்துள்ளது.

இதையும் படியுங்கள் : இந்தியர்களுக்கு திறக்கப்பட்ட சிங்கப்பூர் VTL சேவை

குறிப்பாக சிங்கப்பூரில் அதிக அளவில் வசிக்கும் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் இந்த VTL சேவை m மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. இதுகுறித்து CNAவிடம் பேசிய பயண முகவர் ஒருவர் “இப்போது அனைவரும் பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர், ஏனெனில் தனிமைப்படுத்துதல் இல்லை மற்றும் இந்தியாவுக்கு நேரடி விமானம் உள்ளது, எனவே விமானங்களுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது” என்று ஏஜென்சியின் இயக்குனர் கூறினார்.

“வந்தே பாரத் மிஷனுக்கான (VBM) அதிக தேவையை நாங்கள் ஏற்கனவே காண்கிறோம், விமானங்கள் (இந்த மாதத்திற்கான) அனைத்தும் ஏற்கனவே மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு முன்பே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டதை போல நவம்பர் 29ம் தேதிக்குள் சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தலா இரண்டு தினசரி VTL விமானங்களை மீண்டும் தொடங்க “ஒரு நோக்கம்” இருப்பதாக கூறினார்.

தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/saagatamil

இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக அவர் கூறினார், VTL அறிவிப்புக்குப் பிறகு இந்தியாவிற்கு விமானங்களைக் முன்பதிவு செய்ய கேட்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக ரங்கூன் ஏர் டிராவல் தெரிவித்துள்ளது. “நாங்கள் வழக்கமாக ஒரு நாளைக்கு சுமார் 20 வாடிக்கையாளர்களைப் பெறுகிறோம், அவர்கள் இந்தியாவுக்கான விமானங்களைத் குறித்து கேட்கின்றனர். ஆனால் இன்று மட்டும் எங்களுக்கு 45க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன” என்று நிறுவனத்தின் இயக்குனர் கூறினார்.

Related posts