TamilSaaga

ஊழியர்களே உஷார்.. சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் பெயரில் வரும் போலி அழைப்புகள் – MOM விளக்கம்

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் பெயரில் போலி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் வந்தால், ஊழல் தடுப்பு உதவி எண் 1800 722 6688க்கு அழைக்கவும். மேலும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் போன்ற போலி இணையதளங்கள் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.

மேலும் MOM தொடர்பான விஷயங்களில், அனைத்து தகவல்களுக்கும் பரிவர்த்தனைகளுக்கும் https://www.mom.gov.sg என்ற அதிகாரப்பூர்வ மனிதவள அமைச்சகத்தின் (MOM) வலைத்தளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு நாங்கள் அறிவுறுத்த விரும்புகிறோம் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மோசடிகள், அவ்வப்போது வெளிப்படுகின்றன. இவை எதிர்பாராத தொலைபேசி அழைப்புகள் அல்லது MOMலிருந்து வந்ததாகக் கூறப்படும் மின்னஞ்சல்களின் வடிவத்தில் இருக்கலாம். மேலும் MOMன் Hotline என்று கூறி 6438 5122 என்ற எண்ணில் இருந்து கால் வருவதை நீங்கள் காணமுடியும். அந்த அழைப்பில் உங்களிடம் பணம் அல்லது உங்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்பார்கள்.

MOM தொலைபேசி அழைப்புகள் மூலம் உங்கள் நிதி தகவல்களை நாங்கள் கேட்க மாட்டோம் எண்டு மனிதவள அமைச்சகம் அடிக்கடி நினைவுபடுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts