TamilSaaga

படிச்சு முடிச்சாச்சு! வேலைக்கு சிங்கப்பூர் வரணும்.. பணமும் ஏமாற கூடாதா? உங்களுக்கு ஐந்து வழிகள் கியாரண்டியா இருக்கு… அத தெரிஞ்சிக்கிட்டு வந்தா வாழ்க்கை கன்பார்ம்

வெளிநாட்டில் வேலைக்கு செல்லலாம் என முடிவு செய்யும் போது பல நாடுகளை குறித்து ஆராய தொடங்குவார்கள். அந்த லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடிப்பது சிங்கப்பூர் தான். இங்கு தமிழ்நாட்டினை மிஸ் செய்யவே முடியாது. தமிழ் ஆட்கள் பலரும் இங்கு இருப்பதாலும், சிங்கப்பூர் ஒரு பாதுகாப்பான நாடு என்பதாலும் பலரும் வேலைக்காக இங்கு தான் வருகிறார்கள்.

முதலில் சிங்கப்பூர் செல்ல ஆசைப்படும் இளைஞர்களுக்கு அதுகுறித்து பெரிய ஐடியாவெல்லாம் இருக்காது. ஏஜென்ட்டை பார்க்கலாம் லட்சத்தில் காசு கொடுத்தால் உடனே சிங்கப்பூர் செல்லலாம் என ஒரு சிலருக்கு தோணும்.

முதலில் சிங்கப்பூர் போக நீங்க முடிவு செய்து விட்டால் இந்த ஐந்து வழிகளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

முதுகலை பட்டம் படித்துவிட்டு சிங்கப்பூருக்கு டெஸ்ட் அடித்து போக நினைப்பவர்களும் அதிகம். ஆனால், அதை விட ஒரு சிறந்த வழி உள்ளது. முதுகலை பட்டம் படிப்பதற்கு பதில் உங்கள் துறைக்கேற்ற படிப்பினை சிங்கப்பூரில் இருக்கும் கல்வி நிலையங்களில் படியுங்கள். அங்கே படித்து முடித்தவுடன் இண்டர்ன்ஷிப் செய்து விட்டால் நல்ல வேலை கிடைத்து விடும். ஆனால், இதற்கு படிக்கும் செலவு அதிகம் தான். ஆனால் வேலைக்காக ஏஜென்ட்டிடம் கொடுக்கும் தொகையும் இதே அளவில் தான் இருக்கும். சிங்கப்பூரில் படித்து வேலை கிடைக்கும் போது சம்பளமும் அதிகம்.

ஆன்லைன் ஆப் மூலமாக வேலை தேடலாம். இதற்காக பெரிய செலவுகள் இருக்காது. உங்கள் துறைகளிலும், பொதுவான துறைகளிலும் வேலை வாங்கலாம். கம்பெனி உங்களை அழைத்து வந்து பயிற்சி கொடுத்துக்கூட வேலைக்கு சேர்த்து கொள்வார்கள். ஆனால், இது அவ்வளவு எளிதாக வேலை கிடைத்து விடாது.

ஏஜென்ட்டின் மூலம் வேலை தேடலாம். 4 லட்சத்துக்கும் அதிகமாக செலவுகள் இருக்கும். நீங்கள் கேட்கும் துறைகளில் வேலை தேடிக் கொடுப்பார்கள். அதில் கிடைக்காத பட்சத்தில் பொதுவான துறைகளிலும் வேலை வாங்கி கொடுத்துவிடுவர். நல்ல ஏஜென்ட்டாக இருக்கும் பட்சத்தில் உங்களின் காசும் கியாரண்டியாக இருக்கும். வேலையும் கிடைத்து விடும்.

படிக்காதவர்களுக்கு மட்டும் அல்ல படித்தவர்களுக்கு பெரிய உதவியாக இருப்பது skilled test. இதன் கீழ் நிறைய துறைகளில் வேலைகள் இருக்கும். தமிழ் நாட்டிலேயே பயிற்சி கொடுத்து டெஸ்ட் வைத்து உங்களை கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விடுவார்கள். இந்த வேலை கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.

படிக்காமல் டெஸ்ட் அடிக்காமல் சிங்கப்பூருக்கு வர நினைத்தால் pcm permit மூலம் வேலைக்கு வரலாம். கட்டட வேலைக்கும், கப்பல் கட்டும் பணிகளிலும் பணிபுரியலாம். இதற்கும் ஏஜென்ட்டை அணுக வேண்டும். செலவும் கொஞ்சம் அதிகமாகும். ஆனால் சம்பளம் ரொம்பவே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts