TamilSaaga

ஜன்னலை கூட மின்னல் தாக்குமா?.. சிங்கப்பூரில் நடந்த “அபூர்வ நிகழ்வு”.. ஆளுக்கொரு கருத்தை முன்வைக்கும் நெட்டிசன்கள் – உண்மையில் நடந்தது என்ன?

நேற்று சிங்கப்பூரில் பரவலாக பல இடங்களில் கனமழை முதல் அதிகன மழை வரை பெய்தது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் கனமழை ஒருபுறம் கொட்டித்தீர்க்க, நேற்று சிங்கையில் ஒருசில அபூர்வ நிகழ்வுகளும் நடந்துள்ளது.

பொதுவாக உயரமான கட்டிடங்கள் மீது மின்னல் வெட்டுவது இயல்பான ஒரு விஷயம் தான், அதற்காகத் தான் உயரமான கட்டிடங்கள் மீது இடிதாங்கிகள் வைக்கப்படுகின்றன.

ஆனால் நேற்று ஏப்ரல் 23 அன்று The Photographic Society of Singapore என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு மின்னல் புகைப்படம் பலரை பயங்கரமாக யோசிக்கவைத்துள்ளது. அந்த புகைப்படத்தை எடுத்த போட்டோக்ராபர் குயின்ஸ்டவுன் HDB பிளாக்கில் உள்ள ஒரு வீட்டிலுள்ள ஜன்னலை நோக்கி மின்னல் நேராகச் சென்றது போல் தோன்றியதாக தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 735கி ஹெராயின் கடத்தல்.. ஒரு பெண்மணி உள்பட 4 முதியவர்கள் கைது – “இரும்புக்கரம்” கொண்டு விசாரிக்கும் CNB

பொதுவாக கட்டிடங்களின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் மின்னல் கம்பிகளை ஏன் இந்த மின்னல் தாக்கவில்லை என்று யோசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உடனே கமெண்ட்களை குவிக்க துவங்கிய நெட்டிசன்கள் அந்த கட்டிடம் இன்னும் கட்டிமுடிக்கப்படாத கட்டிடமாக இருக்கலாம், அதனால் தான் அங்குள்ள கம்பியில் மின்னல் வெட்டியுள்ளது என்று கூறினார்.

ஆனால் அதே குடியிருப்பு பகுதியின் இரவு நேர புகைப்படம் ஒன்றில் அந்த கட்டிடம் முழுவதும் விளக்குகள் எரிவதை காணமுடிந்தது. எனவே மின்னல் தாக்கிய அந்த குடியிருப்பில் மக்கள் வசிப்பது உறுதியானது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு வழக்குகள்.. 4 மாதத்தில் 5500 பேர் பாதிப்பு – அமைச்சர் Grace Fu எச்சரிக்கை

மின்னல் தாக்கிய அந்த குறிப்பிட்ட ஜன்னல் அருகே ஏதேனும் உலோகம் அல்லது மின்சாதனங்களை வீட்டு உரிமையாளர்கள் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இன்னும் ஒருபடி மேலே சென்று சிலர் அந்த வீட்டில் இடியின் கடவுள் Thor வசிக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் உயரத்தில் உள்ள இடிதாங்கியை தாக்காமல் ஏன் அந்த மின்னல் அந்த ஜன்னலை தாக்கியது என்று தெரியவில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts