TamilSaaga

“சிங்கப்பூரில் வாழ்க்கையை துவங்க சேமித்து வைத்தோம்” : நொடிப்பொழுதில் களவுபோன 1,20,000 டாலர் – விரக்தியில் தம்பதி

சிங்கப்பூரில் இரு இளம் வயது ஆணும் அவரது மனைவியும் சுமார் 5 ஆண்டுகால உழைப்பில் $1,20,000 சேமிக்க வெறும் 30 நிமிடங்களில் ஒரு போலியான குறுஞ்செய்தியைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் அவர்களது OCBC வங்கியின் கூட்டுச் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரின் கடைசி இரண்டு வாரங்களில் OCBC சம்பந்தப்பட்ட மோசடிகளுக்கு பலியானதாகக் கூறப்படும் குறைந்தது 469 பேரில் அந்த இளம்வயது தம்பதியும் அடங்குவர், பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 8.5 மில்லியன் டாலர்களை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “மருத்துவமனைக்குள் வர மறுக்கப்பட்ட கர்பிணி” : கெஞ்சிய கணவர், இறுதியில் அரங்கேறிய கொடூரம் – ஏன் அனுமதிக்கவில்லை தெரியுமா?

தி சண்டே டைம்ஸிடம் பேசுகையில், அடையாளத்தை அளிக்க மறுத்த அந்த தம்பதியினர், ஒரு சிறந்த வாழ்க்கையை துவங்க முடிவு செய்து தாங்கள் சேமித்து வருவதாகக் கூறினர். ஆனால் திருடுகொடுக்கப்பட்ட பணத்தை அவர்களால் திரும்ப பெற முடியவில்லை.கணவர் இ-காமர்ஸ் துறையில் பணிபுரிகிறார், அவரது மனைவி Hospitality துறையில் உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நண்பகல் வேளையில் ஒரு லிங்க்-வுடன் கூடிய அந்த மோசடி செய்தி தனக்கு வந்ததாக அந்த நபர் கூறினார். அதில் அறியப்படாத பணம் பெறுபவர் தங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டதாகக் கூறியது, மேலும் அது அவரால் அங்கீகரிக்கப்படவில்லை என்றால் இணைப்பைக் கிளிக் செய்யும்படி அவருக்கு அறிவுறுத்தியது.

“OCBCயில் இருந்து வந்ததைப் போல அந்த SMS இருந்தது என்றும் அவர் கூறினார், அதன் பிறகு “அந்த லிங்க் என்னை OCBC உள்நுழைவுப் பக்கத்தைப் போன்ற ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்றது” என்றும் கூறினார். பின்னர் அவர் தனது கணக்கு விவரங்களை உள்ளிட்டார், தனது முழு கணக்கின் கட்டுப்பாட்டையும் மோசடி செய்பவர்களிடம் ஏதும் அறியாமல் ஒப்படைத்தார். அன்று பிற்பகலில் நடந்த கணக்கு தொடர்பான மாற்றங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து அந்த நபருக்கு வங்கியிலிருந்து SMS வந்தபோதுதான் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை தம்பதியினர் உணர்ந்தனர்.

இதையும் படியுங்கள் : Exclusive : “லேசாக சேதமடைந்த Passport” : ரத்தானது திருச்சி – சிங்கப்பூர் பயணம் – திருச்சி விமான நிலையத்தில் தனியே தவித்த பயணி

அவர் தனது குறுஞ்செய்தி வரலாற்றைக் காட்டினார், அதில் வங்கி அவருக்கு மதியம் 2 மணியளவில் எச்சரிக்கை SMS அனுப்பியது, ஆனால் பணம் எடுக்கப்பட்ட தகவல் மாலை 6 மணிக்கு மேல் வந்துள்ளது. “அறிவிப்புகளை நாங்கள் சரியான நேரத்தில் பெற்றிருந்தால், எங்களால் விரைவாக செயல்பட முடிந்திருக்கும், மேலும் அதே வணிக நாளில் தொடர்புடைய குழுக்களை அணுகி பரிவர்த்தனைகளை நிறுத்தியிருக்கலாம்” என்று அந்த நபர் கூறினார். ஆனால் அந்த மோசடி கும்பலால் SMS நேரத்தையும் மாற்றியிருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts