TamilSaaga

சிங்கையில் இருக்கும் தமிழரா நீங்க… SingPass ஓபன் செய்வது எப்படி… இதற்கு Eligibleஆக என்ன செய்யணும்?

சிங்கப்பூரில் வேலைக்கு வந்திருக்கும் ஊழியர்கள் எல்லாருக்குமே ரொம்பவே பழக்கமான வார்த்தை என்றால் அது SingPass தான். இது குறித்த முக்கிய பல தகவல்களை தான் இதில் பார்க்க போகிறோம்.

SingPass என்பது ஒன் ப்ளேஸ் லாகின் என அழைக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் சார்ந்த அனைத்து சேவைகளுக்குமே இது பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் அடையாள அட்டையாக பயன்படும் இதை வொர்க் பாஸ்( Work permit, SPass, EPass) ஊழியர்கள் மட்டுமல்லாது Dependent மற்றும் Long term விசிட் விசாவில் இருப்பவர்களும் துவக்கி கொள்ள முடியும். இதற்கு குறைந்தபட்ச வயது 15க்கு மேல் இருக்க வேண்டியது அவசியம்.

MOMல் நீங்க பதிவு செய்த முகவரியும் சிங்பாஸுக்கு நீங்க கொடுக்கும் முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், லாகின் செய்தவுடன் முகவரிக்கு போஸ்ட் மூலமாக தான் பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும்.

ஒரே ஒருமுறை மட்டும் தான் சிங்பாஸ் ஓபன் செய்ய முடியும். கேன்சல் செய்யவோ மீண்டும் அப்ளே செய்யவோ முடியாது. நீங்களே ஆன்லைனில் அப்ளே செய்யலாம். அல்லது அருகில் இருக்கும் CPF மையங்களில் செய்து கொள்ள முடியும்.

இதையும் படிங்க: 2023ன் ஆண்டின் மிகப்பெரிய layoffs செய்யும் மைக்ரோசாப்ட்… 10000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறதாம்… இந்திய ஊழியர்களின் நிலை?

நீங்களே பதிவு செய்ய singpass.gov.sg என்ற லிங்கை க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள். அதில் இருக்கும் optionகளில் சர்வீஸில் Register for Singpass என்பதை க்ளிக் செய்யவும்.

அடுத்து ஓபனாகும் பக்கத்தில் யாரெல்லாம் சிங்பாஸ் ஓபன் செய்யலாம் என்ற அடிப்படை தகவல்கள் இருக்கும். அதில் இருக்கும் பாக்ஸை க்ளிக் செய்தால் உள்ளே செல்லும். அதில் உங்களின் பெயர் மற்றும் FIN எண்ணை கொடுத்து சப்மிட் செய்ய வேண்டும். அடுத்து பக்கத்தில் உங்களின் ரிஜிஸ்டர் சக்ஸஸ்புல் என வந்துவிடும். அதன்பிறகு 5 நாட்கள் கழித்து பாஸ்வேர்ட் வீட்டின் முகவரிக்கு போஸ்ட்டில் வரும்.

உங்களின் FIN எண்ணை லாகின் ஐடியாக போட்டு வந்திருக்கும் பாஸ்வேர்டினை எண்டர் செய்தால் வெப்சைட்டில் சிங்பாஸை பயன்படுத்தலாம். ப்ளேஸ்டோரில் இதற்காக பிரத்யேகமான ஆப்பும் உள்ளது. அதையும் ஓபன் செய்து இதே வழியில் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்தவுடன் இன்னும் சில செக்குரிட்டி தகவல்களும் உங்களிடம் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்பாஸில் வருமானவரித்துறை தகவல் தொடங்கி ஏகப்பட்ட சர்வீஸை ஒரே இடத்தில் உங்களால் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுடைய Sing Pass login ID மறந்துபோயிருந்தால் Retrieve Singpass ID என்ற சர்வீஸினை கிளிக் செய்து அதில் உங்கள் NRIC மற்றும் கேட்கப்படும் தகவல்களை உள்ளிட்டு IDயை மீட்டெடுக்கலாம். இதே வழியில் பாஸ்வேர்ட்டினையும் மீட்டெடுக்க முடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts