TamilSaaga

முடியாது… முடியாது.. அடம் பிடிக்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்… வொர்க் பெர்மிட் expiry ஆகும் ஊழியர்களுக்கு transfer கொடுக்காமல் இந்தியா அனுப்புகிறதா? ஏன் சார் இப்படி

சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்களின் விசா முடியும் நேரத்தில் நிறுவனம் உங்களை வேறு நிறுவனத்திற்கு மாற அனுமதிக்காமல் இருக்கிறதா? சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புகிறார்களா? தொடர்ந்து சிங்கப்பூரில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும்.

பொதுவாக சிங்கப்பூர் வேலைக்கு வரும் ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட வருட காண்ட்ராக்ட்டில் தான் வருவார்கள். ஒரு சிலர் தொடர்ந்து அந்த கம்பெனியில் வேலை செய்ய விரும்பி அதை புதுப்பித்து கொண்டே இருப்பார்கள். ஒரு சிலருக்கு இடையிலேயே வேறு கம்பெனியில் வேலை கிடைத்து மாறியவர்களும் இங்கு உண்டு. ஆனால் சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட் முடியும் வேறு கம்பெனிக்கு மாறுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

சிங்கை மனிதவளத்துறை தெரிவிப்பது என்னவென்றால் உங்களின் கம்பெனி கொடுத்திருக்கும் பெர்மிட் முடிய 40 நாட்கள் இருக்கும் பட்சத்தில் உங்களால் வேறு நிறுவனத்துக்கு மாற முடியும். ஆனால் இப்போது பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை இப்படி மாற அனுமதிப்பது இல்லை. அதற்கு மாறாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட் காலாவதி ஆக இருக்கும் 40 நாட்களுக்குள் வேறு கம்பெனிக்கு மாறிக்கொள்ளலாம் என்ற விதி இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் இதை இப்போது இருக்கும் பல கம்பெனிகள் ஒப்புக்கொள்வதே இல்லை. ஊழியர்களின் பெர்மிட்டை புதுப்பிக்க தேவை இருக்காத பட்சத்தில் அவர்களை சிங்கப்பூரில் இருந்து டிக்கெட் போட்டு விமான நிலையம் வரை வந்து இந்தியா திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

உங்கள் கம்பெனி நீங்கள் வேறு கம்பெனிக்கு மாற இருப்பதை கூறும் போது ஒப்புக்கொண்டு உங்களுக்கு transfer சான்றிதழ் கொடுத்து விட்டால் இதில் எந்த பிரச்னையுமே இல்லை. ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது. இந்தியாவிற்கு திரும்ப வேண்டியது தான்.

இதுகுறித்து தமிழ் சாகா குழுவினரும் களத்தில் இறங்கி விசாரித்ததில், ஊழியர்களின் பெர்மிட்டின் காலாவதி 40 நாட்கள் இருக்கும் போது மாறிக்கொள்ளலாம் என்ற விதி இருக்கிறது. இதற்கு transfer சான்றிதழ் கூட தேவையில்லை. ஆனால் இது எல்லாமே நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கையில் தான் இருக்கிறது.

அவர்கள் ஓகே சொல்லும்பட்சத்தில் உங்களால் சிங்கப்பூரில் வேறு நிறுவனத்துக்கு மாற முடியும். இல்லாத பட்சத்தில் இந்தியாவிற்கு தான் திரும்ப முடியும். MOM மிடம் இதுகுறித்து முறையிட்டாலும் கூட இந்த பிரச்னைக்கு அவர்களால் இன்னும் சரியான தீர்வை அறிய முடியவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts