TamilSaaga

சாப்பிடும் பொழுதே தட்டில் நெளியும் ஆக்டோபஸ்… வித்தியாசமான உணவை உட்கொள்ள நினைத்த முதியவருக்கு ஏற்பட்ட நிலை!

பொதுவாகவே சைனா மற்றும் கொரியாவை சேர்ந்த மக்கள் விதவிதமான உணவை உண்பதில் ஆர்வம் கொண்டவர்கள். அந்த பழக்கமே ஒரு மனிதருக்கு தற்பொழுது உயிருக்கே ஆபத்தாய் முடிந்துள்ளது. உலகின் மிகவும் ஆபத்தான உணவாக கருதப்படும் லைவ் ஆக்டோபஸ் எனப்படும் சன்னக்ஜி உணவினை சாப்பிட்ட 82 வயது முதியவர் தென்கொரியாவில் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக இந்த உணவு ஆக்டோபஸ் உயிருடன் நெளிந்து கொண்டிருக்கும் பொழுதே உண்ணப்படும் உணவாகும்.

தென்கொரியாவை சேர்ந்த முதியவர் விதவிதமான உணவினை ருசித்து மகிழ்வதில் ஆர்வம் கொண்டவர் ஆவார். எனவே இந்த ஆக்டோபஸ் உணவினையும் உட்கொள்ள அவர் ஆசைப்பட்டார். இந்த உணவானது உயிருடன் இருக்கும் ஆக்டோபஸ்சினை உப்பு,எள் மற்றும் எண்ணெய் போன்றவை சேர்த்து பதப்படுத்தி வழங்கும் உணவாகும். பதப்படுத்தப்பட்ட ஆக்டோபஸ் துண்டு வெட்டி பரிமாறப்படும். ஆக்டோபஸை வெட்டினாலும் கூட நரம்புகளில் சில நிமிடங்களில் அசைவுகள் இருக்கும் என்பதால் இந்த உணவானது ஆக்டோபசினை உயிருடன் உண்பது போன்றவை உணர்வினை தரும்.

இந்த உணவினை முதியவர் சாப்பிட்ட பொழுது அவரது தொண்டையில் ஆக்டோபஸ் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடிதுடித்தார். தீயணைப்பு வீரர்கள் உடனே வருவதற்குள்ளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த உணவினை இதுவரை சாப்பிட்டு பல பேர் இறந்துள்ள நிலையில் தற்போது முதியவரும் இறந்துள்ளார். இந்த உணவினை சாப்பிட்டு பல பேர் இறந்தாலும் கூட இந்த உணவானது தொடர்ந்து தென்கொரியாவில் பிரபலமான உணவாக கருதப்பட்டு வருகின்றது. பொதுவாகவே இந்த உணவினை சாப்பிடும் பொழுது அவசரம் இல்லாமல் மெதுவாக நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்று ஏற்கனவே சாப்பிட்டவர்கள் கூறுகின்றனர். மேலும் மதுபானம் உள்ளிட்டவை சாப்பிடாமல் இருந்தால் மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படாமல் தப்பிக்கலாம் எனவும் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது இப்படி எல்லாம் கூட உணவினை சாப்பிட வேண்டுமா என்ற எண்ணம் நம்மில் தோன்றுகின்றது.

Related posts