இந்த டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே வைரல் தான், நிச்சயம் உங்கள் ஒரு நாள் பொழுதில் ஒரு வைரல் வீடியோவையாவது நீங்கள் பார்க்க முடியும். உண்மையில் அக்கால மனிதர்களுக்கு அப்போது கிடைக்காத ஒரு வரம் என்றே இதனை கூறலாம். இந்நிலையில் தற்போது சிங்கப்பூரில் Passport மற்றும் விசா, அட VTL அனுமதி கூட பெறாமல் சிங்கப்பூரில் இருந்து ஜோகூருக்கு நீதியே சென்ற ஒருவரின் காணொளி வைரலாகி வருகின்றது. சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் இடையே உள்ள கடல் பகுதியில் காட்டுப்பன்றி ஒன்று நீந்திக் கொண்டிருந்த வீடியோ தான் அந்த வைரல் வீடியோ.
உயிரியல் அடிப்படையில் பன்றிகள் மிகசிறந்த நீச்சல் வீரர்கள் தான். உணவு, பாதுகாப்பு என்று இந்த இரு விஷயங்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நீந்துமாம். ஜோகூர் ஜலசந்தியைக் கடப்பதற்கும், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தடுப்பூசி பயணப் பாதைகளை (VTL) திறம்பட முறியடிக்கும் அந்த பன்றியின் துணிச்சலான முயற்சியின் காணொளி கடந்த வியாழன் (பிப்ரவரி 24) அன்று Beh Chia Lor என்ற Facebook பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.
சிங்கப்பூர் ஜோகூர் இடையே நில VTL சேவை இருக்கும்போது இந்த பன்றி மாற்று வழியை கண்டுள்ளதாக பலரும் நகைப்போடு கூற, விலங்குகள் நீந்தி சென்று ஓரிடத்தில் இருந்து வேறிடம் செல்வது புதிதல்ல என்று உயிரியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் காஸ்வேயை தவிர்க்க பன்றி விரும்பியிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ அது பலே பன்றி தான், எப்படியோ செலவில்லாம ட்ராவல் பண்ணிட்ட.