TamilSaaga

சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களே நான் தான் உங்க மனசாட்சி பேசுறேன்… உங்க ஒவ்வொருவரின் மனசுல இருக்கும் ஏக்கங்கள்!!!

சொந்த நாட்டில் என்ன வேலை பார்த்தாலும் சம்பளம் எல்லாம் செலவாகவே போய்விடும் போது பேசமாக வெளிநாட்டுக்கு போய் சம்பாரிக்கலாம் என்பதே பலரின் முதல் எண்ணமாக இருக்கும். ஆனால் அதற்கு ஆகும் செலவே லட்சங்களை தாண்டும் என பலரும் நினைக்கவே மாட்டார்கள்.

இவர்களின் இன்னொரு சாராரோ, பக்கத்து வீட்டில் வேலைக்காக வெளிநாடு சென்ற மகன் நல்ல நாள், பெருநாளில் 50 ஆயிரத்துக்கும் குறையாமல் காசை அனுப்பும் போது, நம்ம மகனையும் வெளிநாடு அனுப்பினால் காசு கிடைக்குமே என பெற்றோர்கள் நினைப்பாக இருக்கும். இப்படி யோசிக்கும் பலரும் அந்த வெளிநாட்டு வாழ்க்கை அவ்வளவு எளிதாகவா இருக்கும் என்பதை மறந்தே விடுவார்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் தமிழ் ஊழியர்கள் எங்க கூட இருந்தாலே போதும்… யானை பலம் .. மற்ற நாட்டின் ஊழியர்கள் பக்கத்தில் கூட வர முடியாது – முதல்முறையாக உரக்கச் சொல்லப்பட்ட உண்மை!

வெளிநாடு செல்ல ஆசை வந்த இளைஞர்கள் முதற்கட்டமாக அதற்கான ஏஜென்ட்டை தேடுவர். இதில் முதல் தவறு தொடங்கும். சம்பளம் அதிகமாக வாங்கி தரும் ஏஜென்ட்டையே பலர் தேடுகிறார்கள். ஆனால் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு ஏஜென்ட்டிடமே லட்சங்களை ஏமாந்த இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சரி நல்ல ஏஜெண்ட் கிடைத்தாகி விட்டது. சிங்கப்பூர் அனுப்பி வேலையும் வாங்கி கொடுத்துவார் என நம்பிக்கை இருந்தாலும் கூட அவர் கேட்கும் கட்டணம் 3.5 லட்ச ரூபாயில் இருந்து 4 லட்சமாக இருக்கும். இந்த காசு இல்லைனு தானே வெளிநாடு போறோம் என யாருமே நினைக்க மாட்டார்கள். தெரிந்தவர்களிடம் கடனை வாங்கி, நிலங்களை அடகு வைத்தோ பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவார்கள்.

கஷ்டப்பட்டு சிங்கப்பூருக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் இரண்டு வருடம் நரகமாக தான் அமையும். காரணம் என்ன சம்பளம் வாங்கினாலும் கடனை அடைக்கவே இரண்டு வருடமாகி விடும். அதற்கு பிறகே தன் குடும்பத்திற்கு எதையாவது செய்ய முடியும். ஆனால் இந்த இரண்டு வருடத்தில் சிங்கப்பூர் மண்ணில் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்னை சாப்பாடாக தான் இருக்கும்.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு பொட்டிய கட்டுறப்பயே… இந்த Document-ஐ மறந்துடாதீங்க… அப்புறம் சிங்கப்பூருக்கு எண்ட்ரி இல்லை எக்ஸிட் தான்…

அம்மா சமைத்த உணவில் இது சரியில்லை.. அதில் உப்பு இல்லை என குறை சொன்ன பலருக்கும் அம்மா கையில் கஞ்சியாவது கிடைத்து விடாத என்ற ஏக்கம் தொற்றிக்கொள்ளும்.

மேலும், குடும்பத்தை பிரிந்து பொந்து மாதிரி இருக்கும் அறைகளில் காலத்தை கழிக்கும் போது சிலருக்கு என்னடா வாழ்க்கை இதுனு தான் தோணுமாம். இப்படி கடனை வாங்கி கஷ்டப்பட்டு போராடும் பலரும் அவர்கள் துறைகளில் வேலை செய்கிறார்களா எனக் கேட்டால் அதுவும் இல்லை. படித்தது ஒன்று வேலை செய்வது ஒன்றாக தான் இருக்கும்.

இப்படி வேறு துறைகளில் பார்க்கும் வேலையை சொந்த நாட்டிலே பார்த்து இருக்கலாமே என யாருக்கும் எண்ணம் தோணாது. ஆனால் அவர்கள் இளமை தொலைந்தாலும் குடும்ப பொருளாதாரம் முன்னேறிவிடாதா என்ற ஏக்கமே மேலோங்கி இருக்கும். இதுவும் கடந்து போகும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts