TamilSaaga

வொர்க் பெர்மிட்டில் வேலை செய்யும் வெளிநாட்டினர் சிங்கப்பூரில் இருபது வருடங்களுக்கு மேல் வேலை செய்யமுடியுமா? வயது வரம்பு என்ன?

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் work permit மட்டுமின்றி பலவிதமான பாஸ்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் பணி சார்ந்த துறை, தகுதி, அந்த பணியாளர் சார்ந்த நாடு, quota and levy ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு தகுதி உடைய ஆண்டுகள், வயது வரம்பு ஆகியவை மாறுபடும்.

வெளிநாட்டினருக்கான work permit தகுதிகள் :

  • அனைத்து வெளிநாட்டினருக்கும் work permit பெறுவதற்கு 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.
  • work permit விண்ணப்பம் செய்வதற்கு மலேசிய பணியாளர்களாக இருந்தால் 58 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். மலேசியர்கள் அல்லாத மற்ற நாட்டினருக்கான வயது வரம்பு 50 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.
  • NTS, PRC நாடுகளைச் சேர்ந்த work permit பணியாளர்கள் Basic-skilled (R2) பிரிவை சேர்ந்தவராக இருந்தால் அவர்கள் 14 வருடங்கள் வரை சிங்கப்பூரில் வேலை செய்யலாம்.
  • NTS, PRC நாடுகளைச் சேர்ந்த work permit பணியாளர்கள் Higher-skilled (R1) பிரிவை சேர்ந்தவராக இருந்தால் அவர் 26 வருடங்கள் வரை பணி செய்ய முடியும்.
  • அதே சமயம் NAS, Malaysia நாடுகளை சேர்ந்த அனைத்து துறை பணியாளர்களும் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு எந்த விதமான ஆண்டு வரையறையும் கிடையாது.
  • NTS and PRC Work Permit வைத்திருப்பவர்கள் Process Maintenance and Construction Worker துறைகளில் மட்டுமே பணியாற்ற முடியும். Process Maintenance and Construction Worker என்ற பிரிவின் கீழ் பணி புரிய கீழ் காணும் 14 துறைகளை சேர்ந்தவர்கள் மட்டுமே தகுதி உடையவர்களாக சொல்லப்படுகிறது.
  • Electrical and Instrumentation works
  • General fitting
  • Machine fitting
  • Metal Scaffolding
  • Painting and blasting
  • Plant civil works
  • Plant equipment fitting
  • Process pipefitting
  • Refractory
  • Rigging and material handling
  • Rotating equipment fitting
  • Thermal insulation
  • Welding
  • Driving of heavy vehicles
  • Process Maintenance and Construction Worker துறைகளில் பணியாற்றும் Work Permit வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த தகுதிகள் பொருந்தும். அதே சமயம், manufacturing துறையில் பணி செய்யும் Work Permit வைத்திருப்பவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான கால வரையறை மாறுபடும்.
  • manufacturing துறையை பொருத்த வரை, PRC and NTS நாடுகளை சேர்ந்த பணியாளர்களாக இருந்தால் Basic-skilled (R2) பிரிவில் 14 ஆண்டுகள் வரை பணி செய்யலாம். அதே சமயம், PRC and NTS நாடுகளை சேர்ந்த Higher-skilled (R1) பணியாளர்கள் 22 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும்.
  • NAS, Malaysia பணியாளர்களை பொருத்தவரை எந்த துறை, எந்த தகுதி பிரிவை சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் சிங்கப்பூரில் பணியாற்ற எந்த கால அளவும் கிடையாது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts