சிங்கப்பூர் என்றாலே வார இறுதி நாள்களில் கேளிக்கைகளுக்கு பஞ்சம் இருக்காது.குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கு சிங்கப்பூரில் ஏராளமான இடங்கள் உண்டு.வித்தியாசமாக பொழுதை கழிப்பதில் சிங்கப்பூர் வாசிகளும் அதிகம் விருப்பமுள்ளவர்கள். அந்த வரிசையில் தற்பொழுது சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரின் மண்டாயில் உள்ள பறவைகளின் பூங்காவில் பெங்குயின் பறவைகளுடன் பொதுமக்கள் தங்குவதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆறு மாதம் முன்பாக புதுப்பிக்கப்பட்ட பறவைகள் பூங்காவில் பெங்குயின் இனப்பெருக்க நிலையம் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. 17 ஹெக்டார் பரப்பளவு உள்ள இந்த பூங்காவில் பல உள்நாட்டு வெளிநாட்டு பார்வையாளர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பெங்குயின் குஞ்சு வளர்ப்பினை நேராக பார்வையாளர்கள் கண்டுபிடிப்பதற்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள பெங்குயின் குஞ்சுகள் ஆனது பணியாளர்களால் பணியாளர்களால் அரவணைத்து தொட்டு பொறுமையுடன் வளர்க்கப்படுவதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும் என்பதால் பார்வையாளர்களுக்கு இது நிச்சயம் ஒரு வித்தியாசமாக அனுபவமாக இருக்கும் என பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் பறவைகள் பராமரிக்கப்படும் விதத்தினை மக்கள் இந்த முகாம் உதவி செய்யும். இந்த ஒரு நாள் முகாமில் இரவு முழுவதும் தங்கி இருந்து பெங்குயின்களுடன் பொழுதை கழிக்கலாம். குடும்பத்திற்கு நான்கு பேர் வரை ஒன்றாக கண்டு களிக்கும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.