TamilSaaga

“இந்த முறை கொஞ்சம் வித்யாசமாக” : “சிங்கப்பூர் தேசிய தின பேரணி உரை” – “ட்ரைலர்” வெளியிட்ட நமது பிரதமர், காணொளி உள்ளே

நமது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வரும் ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 29ம் தேதி 2021 அன்று தேசிய தின பேரணி உரையை அளிக்கவுள்ளார். இந்நிலையில் ஞாயிறு நடக்கும் அந்த நிகழ்வுக்கு முன்னதாக, பிரதமர் லீ தனது சமூக ஊடக பக்கங்களில் ஒரு டீஸர் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் ரம்யமான பின்னணி இசை, அமைப்பின் மெதுவான இயக்க காட்சிகள் மற்றும் அவரது சின்னமான நீல கோப்பை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும் அவர் வெளியிட்ட அந்த காணொளியில் “ஸ்டுடியோ அமைப்பின் படங்கள் காட்டப்பட்டுள்ளபடி, மேலும் பிரதமர் லீ “என் தேசிய தினப் பேரணிக்குத் தயாராகும் மீடியா கார்ப் ஸ்டுடியோவில் நான் தற்போது இருக்கிறேன்” “இந்த ஆண்டு கோவிட் -19 காரணமாக நான் இதை வித்தியாசமாக செய்கிறேன்” என்று அவர் கூறுகிறார்” அவரது சின்னமான நீலக் கோப்பை சிங்கப்பூரர்களிடையே நன்கு அறியப்பட்டிருக்கிறது.

பிரதமர் லீ வெளியிட்ட ட்ரைலர்

பேரணிக்காக பின்வரும் நேரங்களில் மலாய், மாண்டரின் மற்றும் ஆங்கிலத்தில் பிரதமர் லீ பேசுவார். மாலை 6:45 முதல் 7:15 வரை – மலாய் மற்றும் மாண்டரின் மொழியில் பேசுவார். இரவு 8 முதல் 9:15 வரை – ஆங்கிலம். ட்ரெய்லர் வீடியோவில், பிரதமர் லீ, ஸ்டூடியோவில் நேரடி பார்வையாளர்கள் இருப்பார்கள் என்பதை கூறினார். அதோடு 2,000 பேர் தனித்தனியாக ஜூம் பார்வையாளர்களாக பங்கேற்பார்கள் என்றார்.

தொலைக்காட்சி பார்வையாளர்களும், ஆன்லைனில் இருப்பார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts