TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு வர Skilled Test அடிக்க போறீங்களா? அவசரப்பட்டு பணம் செலுத்த வேண்டாம்.. “பெஸ்ட் இன்ஸ்டிட்யூட்ஸ்” லிஸ்ட் இதோ!

சிங்கப்பூரில் வேலைக்கு வர படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து தரப்புக்கும் உள்ள மினிமம் கியாரண்டி Pass எது என்றால், அது Work Permit தான். தமிழகத்தில் டெஸ்ட் அடித்து, சிங்கப்பூரில் வேலைக்கு வ்ருவார்கள். ஆனால், இதில் உள்ள ஒரேயொரு குறை சம்பளம். மிக மிக குறைவான சம்பளமே Work Permit-ல் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இருப்பினும், குடும்ப சூழல் காரணமாக பலரும் இந்த ஆப்ஷனை தேர்வு செய்கின்றனர். இதில், சில ஏஜெண்ட்கள் அதிக தொகை வாங்கிக் கொண்டு இவர்களை work permit-ல் அனுப்புவது அதை விட கொடுமை. எல்லாவற்றுக்கும் மேல, நல்ல ஏஜெண்ட் கிடைத்தாலும், டெஸ்ட் அடிக்க நல்ல இன்ஸ்டிட்யூட் எது என்பதை தேர்வு செய்வதில் நம்மவர்களுக்கு எப்போதுமே குழப்பம் தான்.

டெஸ்ட் இன்ஸ்டிட்யூட் உங்களை பெரும்பாலும் ஏமாற்ற முடியாது என்றாலும், அதிக தொகை கேட்பது, மெயின் டெஸ்டுக்கு அனுப்பாமல் இழுத்தடிப்பது போன்ற தலைவலிகளை தந்து கொண்டே இருப்பார்கள். இதிலிருந்து தப்பிக்க, நல்ல இன்ஸ்டிட்யூட்களை அடையாளம் காணும் விதமாக ‘தமிழ் சாகா‘ குழு தரும் பிரத்யேக ரிப்போர்ட் இது.

ஆம்! இங்கே நாம் மூன்று இன்ஸ்டியூட்களை நமது வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறோம். இவர்கள், எத்தனை வருடங்களாக சிங்கப்பூருக்கான skilled டெஸ்ட் நடத்தி வருகிறார்கள்?, எத்தனை நபர்களை இதுவரை சிங்கப்பூருக்கு சொன்னபடி அனுப்பியுள்ளனர்? எவ்வளவு கட்டணம் பெறுகிறார்கள்? என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் கொடுக்கப்படுகிறது.

இன்ஸ்டிட்யூட் பெயர் அனுபவம்
Hytech Goodwill Training & Testing Centerசென்னையின் மேடவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது இந்த Hytech Goodwill Training & Testing Center எனும் நிறுவனம். 1997-ல் தொடங்கப்பட்ட இந்த இன்ஸ்டிட்யூட், 1999 முதல் ஊழியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வருகிறது. கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம், சிங்கப்பூர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசு மற்றும் தமிழக அரசு ஆகியவற்றில் இந்த நிறுவனம் முறையாக பதிவு செய்துள்ளதாக கூறுகின்றனர் விபரமறிந்தவர்கள்.
RK Singapore (BCA) Skilled Training & Testing Centreஇந்த இன்ஸ்டிட்யூட் கடந்த 1998ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இவர்கள் மூலம் இதுவரை 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிங்கப்பூரில் வேலைப்பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கு சிறப்பம்சம் என்னவெனில், ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்களை பயிற்சியில் ஈடுபட வைக்கும் அளவுக்கு இங்கு இட வசதி உள்ளது. சென்னை நீலாங்கரை பகுதியில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
Tafசென்னையில் இயங்கிவரும் மிக முக்கியமான Skilled Test இன்ஸ்டிட்யூட்களில் இதற்கும் முக்கிய இடமுண்டு. பயிற்சியும் சரி, தங்குமிடமும் சரி, இங்கு நன்றாகவே இருப்பதாகவே கூறப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மூன்று இன்ஸ்டிட்யூட்களில் சேர்ந்து, கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால், அதனை கமெண்ட் செக்ஷனில் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில், நிறைகள் இருக்கும் இடத்தில் குறைகளும் இருக்கும். இந்த மூன்று இடங்களிலும் குறைகள் இருக்கும் பட்சத்தில் அதனை நீங்கள் சுட்டிக் காட்டினால், அடுத்தடுத்து வருபவர்களுக்கு உங்கள் அனுபவமும், அறிவுரையும் உதவிகரமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, Skilled Test-க்கான Quota-வை சிங்கப்பூர் அரசு தற்போது வெகுவாக குறைத்துவிட்டது என்பதை நீங்கள் மறக்க வேண்டாம். ஏனெனில், இதற்கு முன் டெஸ்ட் அடித்த பலரும், சிங்கப்பூரில் வேலைக்கு வராமல் பல்வேறு காரணங்களைச் சொல்லி இழுத்தடிப்பதால், தற்போது கோட்டாவை சிங்கை அரசு குறைத்துவிட்டது. இப்போதுள்ள சூழலில், இன்ஸ்டிட்யூட்க்களில் பணத்தை செலுத்திவிட்டு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதையும் மனதில் வைத்து, தீர விசாரித்த பிறகு, முதற்கட்ட கட்டணத்தை செலுத்துங்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts