TamilSaaga

தீபாவளி முடிந்தும் இந்தியா முழுவதும் எடுத்த பட்டாசு சத்தம்… ஃவேர்ல்ட் கப் பைனலில் கெத்தாக நுழைந்த இந்தியா!

நேற்று இரவு பத்தரை மணி அளவில் தீபாவளி முடிந்தும் இந்தியாவிற்கும் கொண்டாட்டமாக இருந்தது. அதற்கு காரணம் இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது தான். 2019 ஆம் ஆண்டு இதே உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிகள் நுழைந்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று நடந்த போட்டி அமைந்தது. டாஸ் வென்று முதல் முதலாக பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி நாலு விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்து இமாலய இலக்கை நிர்ணயித்தது. அதற்கு அடுத்தபடியாக நுழைந்த நியூசிலாந்து அணியை இந்திய பவுலர்கள் துவம்சம் செய்தனர் என்று சொல்லலாம். குறிப்பாக முகமது ஷமி ஏழு விக்கெட்டை வீழ்த்தினார். அதன்படி 48.5 ஓவரில் நியூசிலாந்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது இந்த போட்டியில் மேலும் ஒரு முத்தாய்ப்பாக விராட் கோலி சச்சின் சாதனையை முறியடித்து உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை பதிவு செய்தார்.

அவர் தனது சதத்தை அடித்த சமயம் மைதானம் எங்கும் உள்ள ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது மைதானத்தை அதிரசெய்தது.ஆக மொத்தம் நேற்று இந்தியா தனது கிரிக்கெட் பயணத்தில் மிகப்பெரிய சாதனையை பதிவு செய்தது என்றே சொல்லலாம். இதனால் தான் தமிழகத்தில் பல்வேறு இடங்களான மதுரை சென்னை மற்றும் பல முக்கியமான நகரங்களில் பட்டாசு சத்தம் இரவு பத்தரை மணிக்கு காதை கிழித்தது.

Related posts