TamilSaaga

சிங்கப்பூரில் ART சோதனைகளில் மோசடி செய்தால் கட்டாயம் சிறை செல்ல வாய்ப்பு – எச்சரிக்கும் வல்லுநர்கள்

சிங்கப்பூரில் எட்டு வாரங்களின் வழக்கமான சோதனைப் பயிற்சி கட்டாயமில்லை என்றபோதும், போலி ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) முடிவுகளை சமர்ப்பிக்கும் நிலையில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்னமும் அதிக சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர்கள் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்படலாம் என்று வழக்கறிஞர் கோரி வோங் தி சண்டே டைம்ஸிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர் வோங், சீன நாட்டவரான ஜாங் ஷாபெங் (30) என்பவரை பிரதிநிதித்துவப்படுத்தினார், ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் உள்ள தனுக்கி ரா பார் மற்றும் உணவகத்தில் சாப்பிட தடுப்பூசி சான்றிதழை போலியாக தயாரித்து கடந்த புதன்கிழமை மூன்று வார சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜாங் தனது சக ஊழியரிடம் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டதாக சான்றளிக்கப்பட்ட ஒரு மருத்துவரின் மெமோவின் புகைப்படத்தை அனுப்பும்படி கேட்டிருந்தார்.

அதை பெற்ற பிறகு ஜாங், அதில் இருந்து புகைப்படத்தைத் திருத்தி, தனது சக ஊழியரின் பெயரை தனது பெயருடன் மாற்றியுள்ளார். ஆனால் இறுதியில் உணவாக ஊழியர் அளித்த புகாரின் பேரின் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அடுத்தவரின் சான்றிதை பெயர் மாற்றி நீங்கள் பயன்படுத்தும்போது நீங்கள் மோசடி குற்றம் செய்தவராக கருதப்படுவீர்கள் என்றார் வழக்கறிஞர் வோங். மோசடி செய்த குற்றவாளிகளுக்கு ஒரு குற்றச்சாட்டுக்கு மூன்று ஆண்டுகள் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் உள்ள ஆட்சேர்ப்பு நிறுவனமான ராண்ட்ஸ்டாட் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் ஜெயா தாஸ், “சமர்ப்பிப்பின் போது தங்களை சோதனையிடுவதை படமாக்குமாறு ஊழியர்களை கேட்டுக்கொள்வதை உறுதி செய்வதை முதலாளிகள் உறுதி செய்ய முடியும் என்று கூறினார். ஆனால் அது அதிக நிர்வாகப் பணிகளை உருவாக்கும் மற்றும் மனித வளக்குழு ஆய்வு செய்ய மனித மணிநேரத்தை ஏற்படுத்தும், என்று அவர் கூறினார்.

Related posts