TamilSaaga

மூன்று வாரங்களாக ஏற்பாடு செய்து தஞ்சாவூர் ஊழியருக்கு தலை தீபாவளி விருந்தளித்த தனியார் நிறுவன ஊழியர்கள்…“ஒற்றுமையே பலம்” என்பதை நிரூபித்த சம்பவம்!

சிங்கப்பூரில் வாழும் பலரும் சிரமப்பட்டு வேலை செய்கின்றனர் என்றாலும் பண்டிகை காலங்களில் அவர்களின் மன அழுத்தம் கூடுதலாகவே இருக்கும். ஏனென்றால் பண்டிகை என்றாலே குடும்பத்துடன் கொண்டாடும் ஒரு நிகழ்வு தான். புத்தாடை அணிந்து, அறுசுவை உணவு உண்டு, குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடும் நிகழ்வின் பொழுது தனிமையில் இருக்கும் கொடுமையை அனுபவித்தால் மட்டுமே புரியும்.

இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூரில் 20 ஆண்டு காலமாக வாழும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர்கள் நாலு பேர் பிரம்மாண்ட தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அந்த பகுதியில் வாழும் தமிழர்கள் அனைவரும் கொண்டாடி குடும்பத்தின் நினைவு அவ்வளவாக தாக்காமல் தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டனர்.இது குறித்து ஆக்டிவ் ஃபயர் ப்ரொடக்ஷன் என்று விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தின் இயக்குனரான வடிவேல் என்பவர் கூறும் பொழுது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு பக்கபலமாக பண்டிகை காலத்தில் அவர்களுடன் கொண்டாடும் விதத்தில் இந்த விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் கொரோனா பரவலுக்கு பிறகு முதல் முறையாக கொண்டாடப்படும் பெரிய கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஊழியர்களின் மகிழ்ச்சி கேட்ப ஆடல், பாடல், செண்டா மேளம் ஆகிவிட்டது ஏற்பாடு செய்திருந்தனர். அது மட்டும் பண்ணாமல் நிகழ்ச்சியின் முடிவில் ஊழியர்களுக்கு சுவையான உணவும் பரிமாறப்பட்டதாக தெரிவித்தனர்.

இதன் மூலம் ஊழியர்களுக்கு இடையே ஒற்றுமையும் மேம்படுவதாக ஏற்பாட்டளர்கள் கூறினர். அதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜெயபால் ஜெயபிரகாஷ் என்ற ஊழியர். 28 வயதான இவர் தலை தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வேண்டிய சூழ்நிலையில் ஊருக்கு செல்ல முடியாமல் இங்கு தனிமையில் வாடினாலும் கொண்டாட்டத்தின் மூலம் குடும்பத்தின் ஞாபகம் வரவில்லை என தஞ்சாவூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் கூறினார். குடும்பத்தினரை தவித்து சிங்கப்பூரில் வாழும் ஊழியர்களுக்கு ஒருவருக்கொருவரே ஆறுதல்.

Related posts