TamilSaaga

சிங்கப்பூரில் நான்காவது நாளாக 3000ஐ கடந்த நோய் பரவல் : Dormitoryயில் மேலும் 765 பேருக்கு தொற்று பரவல்

சிங்கப்பூரில் புதிய பெருத்தொற்று வழக்குகள் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) 3,000-ஐ கண்டந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் நாட்டில் மேலும் ஆறு பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 67 முதல் 93 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவர். இவர்களில் இரண்டு பேர் பெருத்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை. மூன்று பேருக்கு ஓரளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மற்றும் ஒருவருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இறந்த அவர்களில், ஐந்து பேருக்கு பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைகள் இருந்தன என்று MOH தெரிவித்துள்ளது. இது சிங்கப்பூரில் பெருந்தொற்றல் இறந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்த்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி மொத்தம் 3,590 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது கடந்த வியாழக்கிழமை பதிவான 3,483 வழக்குகளிலிருந்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து வழக்குகளும் உள்நாட்டில் பரவுகின்றன, இதில் சமூகத்தில் 2,825 வழக்குகளும், புலம்பெயர்ந்த தொழிலாளர் விடுதிகளில் 765 வழக்குகளும் உள்ளன. நேற்று இரவி 11 மணியளவில் சுகாதார அமைச்சகம் ஊடங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் நேற்று வெளிநாடுகளில் இருந்து வந்த யாருக்கும் தொற்று பரவவில்லை என்பது கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 1,20,454 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை நான்கு புதிய வழக்குகளைச் சேர்த்த பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை மையம் உட்பட ஐந்து செயலில் உள்ள கிளஸ்டர்களை “உன்னிப்பாகக் கண்காணிப்பதாக” MOH தெரிவித்துள்ளது. செயலில் உள்ள கொத்துக்களில் இரண்டு தங்கும் விடுதிகளும் உள்ளன. ஏஎஸ்பிஆர்ஐ-வெஸ்ட்லைட் பாபன் டார்மிட்டரி ஜலான் பாபனில் 32 புதிய வழக்குகளைச் சேர்த்து, மொத்தம் 229 ஆகக் கொண்டு வந்தது. பிபிடி லாட்ஜ் 1 பி டார்மட்டரியில் 12 வழக்குகள் அதிகரித்து 138 ஆக உள்ளது.

Related posts