TamilSaaga

“உக்ரைனில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூரர்” : உதவிய மலேசியாவிற்கு நன்றி – சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம்

ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டில் மிக அதிக பதட்ட நிலை அமலில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் பல நாடுகளும் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்களை சொந்த நாட்டிற்கு அழைத்து சென்று வருகின்றனர். அந்த வகையில் உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து வெளியேற்றப்பட்ட 12 பேர் கொண்ட குழுவில் ஒரு சிங்கப்பூரரும் அடங்குவார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் “இந்த” படிப்பு படித்த இந்தியர்களுக்கு “லட்சக்கணக்கில்” சம்பளம்.. படையெடுக்கும் இளைஞர்கள் – NodeFlair மற்றும் Quest Ventures அறிக்கை

நாடு திரும்பியுள்ள ஒன்பது மலேசியர்கள் மற்றும் இரண்டு உக்ரைனியர்களை உள்ளடக்கிய குழு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) காலை 5.45 மணிக்கு உக்ரைன் மற்றும் போலந்தின் கோர்சோவா-கிராகோவெட்ஸ் எல்லையை வந்தடைந்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள மலேசியத் தூதரகத்தின் இடைக்காலப் பொறுப்பாளர் திருமதி ஃபாதிலா தாவுத் அவர்கள் இந்த பயணத்திற்கு தலைமை தாங்கினார்.

“போலந்தில் உள்ள மலேசிய தூதரகத்திலிருந்து இரண்டு அதிகாரிகளால் குழுவினர் வரவேற்கப்பட்டனர்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விஸ்மா புத்ரா என்று அழைக்கப்படும் அமைச்சகம், அனைத்து வெளியேற்றப்பட்டவர்களும் உடன் வரும் அதிகாரிகளும் போலந்தின் தலைநகரான வார்சாவுக்குச் செல்வார்கள் என்று கூறினார். கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் உயர் கமிஷன் மற்றும் ஜோகூர் பாருவில் உள்ள துணைத் தூதரகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில், அந்த சிங்கப்பூரரை கடினமான சூழ்நிலையில் கெய்வில் இருந்து வெளியேற உதவிய மலேசிய வெளியுறவு அமைச்சகத்திற்கு “நன்றி” என்று எழுதியுள்ளனர்.

சிங்கப்பூரில் “கக்கா” போய்ட்டு ஃபிளஷ் பண்ணாம வந்தா என்ன தண்டனை தெரியுமா? பதற வைக்கும் “Toilet” விதிமுறைகள்!

“எந்த சாக்குப்போக்கின் கீழும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது தூண்டுதல் இன்றி ஆக்கிரமிப்பு செய்வதை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது. உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts