TamilSaaga

தலைக்கேறிய மதுபோதை.. சாலையை கடக்க முடியாமல் நடுரோட்டில் தள்ளாடிய அரசு பள்ளி மாணவி – இணையத்தில் வைரலான வீடியோ

இளைஞர்கள் சமுதாயம் எங்கே செல்கின்றது என்று கேள்வி எழும் அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்கள் செய்து வரும் காரியங்கள் பலரை முகம் சுளிக்க வைக்கின்றது. குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தே பயிலும் நிலை வந்ததால் பலரும் செல்போன், டிவி இன்னும் சில படிகள் மேலே சென்று மது என்று தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு வருகின்றனர்.

சமூக ஆர்வலர்களும் அரசும் இணைந்து பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வரும் பொழுதும் இளைஞர்களின் சில செயல்கள் தொடர்ச்சியாக பொதுமக்களை கவலைக்குரிய வகையில் ஆழ்த்தி வருகின்றது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, தர்மபுரி அருகே உள்ளது தான் இண்டூர் என்ற கிராமம். சில தினங்களுக்கு முன்பு இன்டூர் பஸ் நிலையத்தில் அரசு பள்ளி மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு தள்ளாடியபடியே சாலையை கடக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கண்ட பொதுமக்கள் சிலர் தங்கள் அலைபேசியில் இதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையைக் கடக்கும் பொழுது மூன்று மாணவிகள் சாலையின் ஒருபுறம் நின்ற நிலையில் ஒரே ஒரு மாணவி மட்டும் சாலையை கடக்க முடியாமல் நடு ரோட்டிலேயே தள்ளாடிய அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தடைகளை உடைத்தெறியுங்கள்.. “சிங்கப்பூரில் இந்திய பெண்களுக்கு உதவ புதிய முயற்சி”.. “Let Her Shine” திட்டத்தை அறிமுகம் செய்த அமைச்சர் இந்திராணி

மேலும் இண்டூர் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் அரசு டாஸ்மார்க் இல்லை என்பதால் மாணவிகளுக்கு எங்கிருந்து மது கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது. மாணவிகள் வேறு இடத்திற்கு சென்று மது அருந்திவிட்டு பள்ளிக்கு சென்றார்களா? என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆய்வு நடத்தி வருகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அந்த அரசு பள்ளி முதல்வருக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு மதுபாட்டில்களை யாரேனும் வாங்கி கொடுத்தார்கள் என்ற கோணத்திலும் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“எங்களுக்கு எல்லாமே ஒரே நேரத்தில் நடக்கணும்”.. ஒரே காதலனுடன் ஒன்றாக வாழும் இரட்டை சகோதிரிகள் – ஒரே நேரத்தில் அம்மா ஆக அவர்கள் எடுத்த “வித்யாசமான முடிவு”

இருப்பினும் எதிர்கால உலகமே இளைஞர்களை நம்பி இருக்கும் இந்த காலகட்டத்தில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts