TamilSaaga

“சிங்கப்பூரில் சூடு பிடிக்கும் VTL சேவை” : “இந்த” நாட்டில் இருந்து தான் அதிகமானோர் சிங்கப்பூர் வந்துள்ளனர்

சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட முதல் இரண்டு மாதங்களில், தனிமைப்படுத்தப்படாத பயணத் திட்டத்தின் VTLலின் கீழ் மொத்தம் 36,034 குறுகிய கால பார்வையாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை மாலை (நவம்பர் 10) சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான புதிய தடுப்பூசி பயணப் பாதைகள் (VTLs) வலுவான ஆர்வத்தைப் பெற்றுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணி நிலவரப்படி, நவம்பர் 8ம் தேதி விண்ணப்பங்கள் திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் மொத்தம் 1,999 விண்ணப்பதாரர்கள் தென் கொரியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 866 குறுகிய கால பார்வையாளர்களும், 1,133 நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களும் நவம்பர் 15 முதல் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

இதற்கிடையில், 2,423 விண்ணப்பதாரர்கள், அதாவது 1,558 குறுகிய கால பார்வையாளர்கள் மற்றும் 865 நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் – நவம்பர் 1 முதல் ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் நுழைவதற்கு அனுமதி பெற்றுள்ளனர். அவர்கள் திங்கள்கிழமை முதல் சிங்கப்பூர் வந்திறங்க முடியும். பயணிகள் தங்களின் நுழைவுத் தேதிக்கு ஏழு முதல் 60 நாட்களுக்குள் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும். சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் 12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் அனுமதிச்சீட்டுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுடன் சேர்ந்து சிங்கப்பூர் இதுவரை 16 நாடுகளுடன் VTLகளை அறிவித்துள்ளது. இவற்றில் நான்கு VTLகள் – தென் கொரியா, மலேசியா, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகியவற்றுடன் இந்த மாத இறுதியில் தொடங்கும். மற்ற 12 VTL நாடுகளுடன் ஏற்கனவே சேவை தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்திற்கானவை வரும் திங்கள்கிழமை முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) புள்ளிவிவரங்களின்படி, இதுவரை வழங்கப்பட்ட அதிக பாஸ்களைக் கொண்ட VTL நாடக ஜெர்மனியில் உள்ளது.

Related posts