TamilSaaga

சிங்கப்பூரில் “கக்கா” போய்ட்டு ஃபிளஷ் பண்ணாம வந்தா என்ன தண்டனை தெரியுமா? பதற வைக்கும் “Toilet” விதிமுறைகள்!

நமது சிங்கப்பூர் இவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் கடுமையான சட்டதிட்டங்கள் தான். உலகில் வேறு எந்த நாட்டை விடவும், சிங்கப்பூரில் சுகாதாரத்துக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான் இந்த செய்தி.

கழிப்பறையைப் பயன்படுத்துவதில் சிங்கப்பூர் மிக மிக கறாரான நாடு என்பதை மறந்து விட வேண்டும். பல நாடுகளில் கழிப்பறையை யூஸ் செய்த பிறகு ஃபிளஷ் செய்யாத நபர்களை பார்த்திருப்போம். கழிவுகள் அப்படியே தேங்கி நிற்கும். குறிப்பாக, பொது கழிப்பறையை பயன்படுத்தும் பலர் இது போன்று பொறுப்பில்லாமல் நடந்து கொள்வார்கள்.

மேலும் படிக்க – “சிங்கப்பூர் வந்திறங்கும் இந்தியர்களுக்கு ஓர் Good News” : இனி Changi Airportல் PCR Test எடுக்கவேண்டாம் – ART எடுக்கவும் உதவி! Exclusive Details

ஆனால் சிங்கப்பூரில் அப்படி செய்ய முடியாது. இங்கு கழிப்பறையை பயன்படுத்திய பிறகு ஃபிளஷ் செய்யவில்லை என்றால் கம்பி எண்ண வேண்டியிருக்கும். அதற்கான நீங்கள் மன்னிப்பு கேட்டாலும், சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

சிங்கப்பூரில் ஒருவர் கழிவறையைப் பயன்படுத்திய பிறகு ஃபிளஷ் செய்யாவிட்டால், 150 டாலர்களுக்கு மேல் அதாவது அபராதம் செலுத்த நேரிடும். அதாவது, இந்திய மதிப்பில் தோராயமாக 8 ஆயிரம் ரூபாய். அந்த நபர் அபராதத்தை செலுத்தத் தவறினால், சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts