TamilSaaga

“சிங்கப்பூர் மாஸ்கோ இடையிலான விமானங்கள் ரத்து” : உடனே அமலுக்கு வரும் நடவடிக்கை – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிரடி

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சாங்கி விமான நிலையத்திற்கும் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கும் இடையிலான அனைத்து விமானங்களையும் காலவரையின்றி நிறுத்தியுள்ளது. “செயல்பாட்டு காரணங்களை” காரணம் காட்டி உடனடியாக இந்த நடவடிக்கை அமலுக்கு வருகின்றது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. SIA இன்று திங்கள்கிழமை (பிப்ரவரி 28) அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாஸ்க்கோவில் இருந்து திரும்பும் விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கை SQ362 மற்றும் SQ361 விமான எண்களை பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“வால சுருட்டிக்கோங்க; இல்லனா ஓட்ட நறுக்கப்படும்” : சிங்கப்பூரில் கடுமையாகும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனை – தரமான சம்பவம்

பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களிடமும் ஏற்பட்ட சிரமத்திற்கு SIA விமான நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் டிக்கெட்டின் பயன்படுத்தப்படாத பகுதிக்கு முழு refund அளிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அந்நாட்டிற்கு சர்வதேச அளவில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் SIAன் இந்த நடவடிக்கை அமலாகியுள்ளது.

ரஷ்யாவுக்கான வான்வழிகளை மூடப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள், ரஷ்ய நபருக்கு சொந்தமான, வாடகைக்கு அல்லது வேறுவிதமாக கட்டுப்படுத்தப்படும் எந்த விமானமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்வெளியில் பறக்க அனுமதிக்கப்படாது என்பதாகும். உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பின் காரணமாக “ஒத்த எண்ணம் கொண்ட பிற நாடுகளுடன் இணைந்து” ரஷ்யா மீது சிங்கப்பூர் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று திங்கள்கிழமை (பிப்ரவரி 28) கூறினார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

“அடுத்த நாள் VTL பயணம்” : மகனை ஆவலோடு எதிர்பார்த்த தந்தை – ஆனால் சிங்கப்பூரிலிருந்து சடலமாக சென்ற மகன்!

உக்ரைனில் நேரடியாக ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் மீது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய சில ரஷ்ய வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனைகளைத் தடுப்பது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் முடிவுகள் அல்லது வழிகாட்டுதல்களை கட்டுப்படுத்தாத நிலையில், மற்ற நாடுகளின் மீது தடைகளை விதிக்க சிங்கப்பூர் “அரிதாகவே செயல்பட்டுள்ளது” என்றும் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts