TamilSaaga

“மேலும் தளர்வடையும் சிங்கப்பூர் எல்லை” : VTL திட்டத்திலும் மாற்றம் – அமலுக்கு வரும் புதிய விதிகள்

சிங்கப்பூரில் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள், சில மாற்றங்களுடன் – ஓமிக்ரான் அலை முடியும் வரை இருக்கும் என்று இன்று புதன்கிழமை (பிப்ரவரி 16) கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளும் பல அமைச்சக பணிக்குழு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் ஓமிக்ரான் அலைக்கு மத்தியில் இருப்பதாகவும், தினசரி சுமார் 20,000 நோயாளிகள் வரை காணப்படுவதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டது. இந்நிலையில் இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்ட கோவிட்-19 நடவடிக்கைகளுக்கான முக்கிய அறிவிப்புகள்:

வங்கி கணக்குகளை பாதுகாக்க “Kill Switch” : சிங்கப்பூர் OCBC வங்கியின் அதிரடி நடவடிக்கை – எப்படி பயன்படுத்துவது?

இப்போதைக்கு, சமூகக் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட குழு அளவு ஐந்து பேராகவே உள்ளது என்று MOH தெரிவித்துள்ளது. பிப்ரவரி 25 முதல், ஒரு குடும்பத்திற்கு தனிப்பட்ட பார்வையாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஒரு நாளைக்கு ஐந்து நபர்களில் இருந்து “எந்த நேரத்திலும்” ஐந்து நபர்கள் பார்வையிடலாம் என்று மாற்றப்படும். மேலும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங் கூறுகையில், சிங்கப்பூர் தற்போதைய பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை சில மாற்றங்களுடன் தொடரும் என்றார்.

பல்வேறு நிகழ்வு வகைகளுக்கான அளவு வரம்புகளை நிர்ணயிப்பதற்குப் பதிலாக, சிங்கப்பூரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் திறனை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வு அளவுகளை அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மார்ச் 4 முதல், மதச் சேவைகள், வணிக நிகழ்வுகள், ஊடக மாநாடுகள், இறுதிச் சடங்குகள் நினைவு நிகழ்வுகள், திருமண வரவேற்புகள் மற்றும் முகமூடி அணியும் வகுப்புகள் போன்ற நிகழ்வுகளுக்கான குறிப்பிட்ட நிகழ்வு அளவு வரம்புகள் நீக்கப்படும்.

மலேசியாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு டிசம்பரில், ஓமிக்ரான் டிரான்ஸ்மிஷன் தொடங்குவதை தாமதப்படுத்த VTL ஒதுக்கீடு தற்காலிகமாக பாதியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று புதன்கிழமை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் VTL (நிலம்) ஒதுக்கீடு பிப்ரவரி 22 முதல் மீட்டமைக்கப்படும் என்று கூறியது. ஒரு நாளைக்கு 2,160 பயணிகளை அனுமதிக்கும் – இது 48 பேருந்து பயணங்களுக்கு சமம்.

மேலும் பிப்ரவரி 22 முதல் பயணத்திற்கான கூடுதல் பேருந்து டிக்கெட்டுகளுக்கான விற்பனை உடனடியாக தொடங்கும். சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பொது சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூர் படிப்படியாக VTL (நிலம்) விரிவாக்கப்படும் என்று திரு கான் கூறினார். அத்தகைய பயணிகளுக்கான நடவடிக்கைகளும் பிப்ரவரி 21, இரவு 11.59 மணி முதல் நெறிப்படுத்தப்படும்

சிங்கப்பூர்.. “சாலையின் குறுக்கே ஓடிய குழந்தை” : சட்டென்று Break போட்ட ஓட்டுநர் – பெண்மணியை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்

ஏற்கனவே இந்த VTL திட்டத்தின் கீழ் முன்பு இருந்ததை விட 50 விழுக்காடு வரையிலான மக்களே தற்பொழுது சிங்கப்பூருக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில். இது கட்டம் கட்டமாக அகற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வரும் செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 22ம் தேதி முதல் தொற்று பரவல் குறைவாக காணப்படும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் மக்கள் இங்கு வந்து இறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART பரிசோதனைகளை, பரிசோதனை மையத்திற்கு சென்று அங்கு மேற்பார்வையின் கீழ் செய்து கொள்ளலாம். விமான நிலையத்தில் எடுக்கவேண்டிய PCR சோதனையை மேற்கொள்ள தேவையில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts