TamilSaaga

உலக அரங்கில் “சிங்கப்பூர் பாஸ்போர்ட்”-ற்கு கிடைத்த மகுடம்!

அனைத்துலக நாடுகளில் மிக சிறந்த மற்றும் செல்வாக்கு மிகுந்த பாஸ்போர்ட் -ஆக சிங்கப்பூர் பாஸ்போர்ட் தேர்வாகியுள்ளது

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான “ஹேன்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்” நிறுவனம்
தற்போது 2023 -ஆம் வருடத்திற்கான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்பது உலகின் அனைத்து பாஸ்போர்ட்டுகளின் அசல் மற்றும் அதிகாரப்பூர்வமான தரவரிசையாகும், அவை விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு வரிசைப்படுத்தப்படுகிறது

இந்த தரவரிசை பட்டியல் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்தியேகத் தரவை அடிப்படையாகக் கொண்டு மிகவும் துல்லியமான பயணத் தகவல்களை கொண்டு ஹென்லி & பார்ட்னர்ஸ் ஆராய்ச்சிக் குழுவால் வெளியிடப்படுகிறது

18 வருட கால வரலாற்றுத் தரவுகளுடன், சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (IATA) பிரத்தியேகத் தரவுகளின் அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு மட்டுமே உள்ளது. இந்த குறியீட்டில் 199 வெவ்வேறு பாஸ்போர்ட்டுகள் மற்றும் 227 வெவ்வேறு பயண இடங்கள் உள்ளன. காலாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும், ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்
தற்போது புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது

அந்த வரிசையில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் உலகின் செல்வாக்கு மிகுந்த பாஸ்போர்ட்டாக அறிவிக்கப்பட்டு தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. “Henley பாஸ்போர்ட் இன்டெக்ஸ்” 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை மதிப்பிட்டு அவற்றை வரிசைப்படுத்தி உள்ளது.

இந்த நிறுவனம் பாஸ்போர்ட்டை” 1 முதல் 107″க்குள் வரிசைப்படுத்துகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதை பொறுத்து வரிசைப்படுத்துகின்றது.

இந்த 107 இடங்களில் முதல் இடத்தில் வந்திருப்பது “சிங்கப்பூர் பாஸ்போர்ட்” சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும்.

அடுத்ததாக இரண்டவது இடத்தில் ஜெர்மனி மற்றும் இத்தாலி இடம்பெற்றுள்ளது.இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டினை கொண்டு 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செல்ல முடியும்

ஐந்து ஆண்டுகளாக முதலிடம் பிடித்த ஜப்பான் தற்போது மூன்றாம் இடத்துக்கு சென்றுள்ளது. அதன் பாஸ்போர்ட்டை கொண்டு 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். ஜப்பானுடன் சேர்ந்து ஆஸ்திரியா தென்கொரியா, சுவீடன், பின்லாந்து மற்றும் பிரான்ஸ் மூன்றாம் இடத்தில் உள்ளது.இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா 80 வது இடத்தை பெற்றுள்ளது.

இந்தத் தரம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்றால் ஒரு நாட்டின் “சராசரி வருமானம், பொருளாதாரம், மக்கள் தொகை, அரசியல் கட்டமைப்பு, அரசியல் நிலைப்பாடு”. இவை அனைத்தும் சரியாக இருந்தால் ஒரு நாட்டின் “பாஸ்போர்ட்டுக்கு” விசா ஃப்ரீ என்ட்ரிஸ் சுலபமாக கிடைக்கிறது

Related posts