TamilSaaga
snehan wife

8 வருட காதல்.. கமல்ஹாசன் தலைமையில் அரங்கேறிய சினேகன் – கன்னிகா திருமணம்!

கவிஞரும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செயலாளரருமான சினேகனுக்கு இன்று சிறப்பாக திருமணம் அரங்கேறியது.

திருமணத்திற்கு 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால் மிகக் குறைந்த நபர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் சினேகன் கன்னிகா ரவி திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது.

சினேகன் – கன்னிகா திருமணத்திற்கு தற்போது திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராஃப் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்த சினேகன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற சினேகன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்

43 வயதான சினேகன், கன்னிகா ரவி (27) என்ற நடிகை எட்டு வருடங்களாக காதலித்து வந்தார். கன்னிகா சன் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாண வீடு சீரியலில் மெயின் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர்களின் காதல் கல்யாணத்தில் முடிந்துள்ளது.
இந்த திருமணத்தை கமல்ஹாசன் நடத்தி வைத்த வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. புகைப்படங்களும் பரவி வருகிறது.

Related posts