TamilSaaga

நாய்கள் கூட நல்ல இடத்தில் இருக்கிறது… மனம் குமுறும் வெளிநாட்டு ஊழியர்கள்… அழுக்கடைந்த தரை.. உடைந்த பாத்ரூம்… வெளிநாட்டு ஊழியர்களின் சிங்கப்பூர் Dormitory இப்டி தான் இருக்குமா?

வேலை மாற்றத்தால் தான் தங்கி இருந்த இடத்தில் இன்னொரு இடத்துக்கு குடிபெயர்கிறார் கான். அந்த புதிய dormitoryல் நுழைந்தவருக்கு பெரிய அதிர்ச்சியே காத்துக் கொண்டு இருந்தது.

இரண்டாக பிளந்து இருந்த தளங்கள் மற்றும் சேதமடைந்த மேல் கூரை, மின்விசிறிகள் ஒருபுறம் இருக்க, மற்ற 25 தொழிலாளர்கள் அதே அறையில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் ஜூரோங் தொழிற்பேட்டையில் உள்ள அதிகமான தங்குமிடத்தில் வாழ்வதில் மோசமான பகுதி கழிப்பறைகள் என்று அங்கிருக்கும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏழு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரியும் கான் தங்களுடைய வாழ்வியலை தெரிவிக்கும் போது, உறங்கும் பகுதி மற்றும் கழிப்பறைகளை பிரிக்க கதவு என்பதே கிடையாது. பலர் அங்கு சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் தொடர்ந்து வீசும். நாங்கள் ஃப்ளஷ் செய்தாலும் கூட, அறையில் எப்போதுமே அந்த கழிவுநீர் போல் துர்நாற்றம் வீசும்.

இதையும் படிங்க: லட்சத்தில் காசு கொடுக்க முடியாதா? கவலையை விடுங்க… Skilled Test இருக்கு… பாஸ் பண்ண என்ன செய்யணும் தெரியுமா… இத படிங்க முழுசா…

பல நாட்களாக இந்த மோசமான வாழ்க்கைச் சூழலில் தான் ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியர்களும் இருக்கிறோம். குடும்பத்திற்காக இதை தாங்கி கொள்ள முயன்றுக்கொண்டு இருக்கிறோம். அதைப்போல, இங்கிருக்கும் எந்த ஊழியர்களும் உணவுக் கழிவுகளை அறைக்குள் கொண்டு வராததால் பூச்சித் தொல்லையில் இருப்பதில்லை என்றார்.

ஆனால், ஒரே அறையில் 25 பேருடன் வாழ்வது என்பது தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து 17 மணி நேரம் வேலை செய்த பிறகு தூக்கமில்லாத இரவுகளை தான் தரும். மேலும், இரவில் தான் அதிக ஊழியர்கள் தங்கள் துணிகளை துவைப்பதால் அந்த சத்தமும் தூக்கத்தினை கெடுக்கும்.

இதுகுறித்து பேசும் கான், நாங்கள் நாய்களைப் போல அல்ல, மனிதர்களைப் போல நடத்தப்பட விரும்புகிறோம். உண்மையில், நாய்களுக்கு எங்களை விட சிறந்த வீடுகள் உள்ளன என்றார்.

இதையும் படிங்க: டிகிரி படித்தவர்களும், படிக்காதவர்களும் ரெடியாக இருங்க… உங்களுக்கு சிங்கப்பூரில் சூப்பர் வேலை கிடைக்க இதை Follow பண்ணுங்க…

பிப்ரவரி 21ல் கான் இதுகுறித்து பகிர்ந்த ஒரு TikTok வீடியோவில், கான் தனது அறையை விட்டு வெளியே ஒரு அறைக்குச் செல்வதைக் காட்டியது. அந்த வீடியோவின் தலைப்பில் அவர் எழுதி இருந்தது, அன்புள்ள மனிதவள அமைச்சகம் (MOM), தங்கள் கடின உழைப்பாளி ஊழியர்களுக்காக, மோசமான தங்குமிடத்தை வழங்கும் நிறுவனங்களை சரிபார்க்கவும்.

கழிவறை திறந்திருக்கும் மற்றும் மிகவும் நெரிசலான படுக்கையறைகளில் தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் எனத் தெரிவித்திருந்தார். அந்த வீடியோக்களை பார்த்த பல நெட்டிசன்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தின் வாழ்க்கை நிலைமைகளால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தான் வசிக்கும் அறையை அவருக்கு தெரிந்தவரை MOM ஒருபோதும் ஆய்வு செய்யவில்லை என்று பகிர்ந்து கொண்டார். அவர் விரும்புவது தங்குமிடத்தை சரியான முறையில் புதுப்பித்தால் நிம்மதியாக தூங்க முடியும் என்று கான் கூறினார்.

நாங்கள் பகலில் மிகவும் கடினமாக உழைக்கிறோம், எனவே ஒரு நல்ல இடத்தில் சிறிது ஓய்வெடுப்பது தொடர்ந்து உழைப்பதற்கு அதிக எனர்ஜியை தரும். நெட்டிசன்களில் சிலர், கானிடம் நன்றி இல்லை என பழித்தனர். அப்படி சொல்பவர்களை தனது தங்குமிடத்திற்குள் கால் வைக்க முயற்சிக்குமாறு வலியுறுத்தினார்.

பங்களாதேஷில் உள்ள தனது அன்புக்குரியவர்களிடம் தனது வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி அவர் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கான் கூறினார்.

புதிய வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கான ‘Improved Standards’
செப்டம்பர் 2021 இல், MOM தேசிய மேம்பாட்டு அமைச்சகம் (MND) மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து, எதிர்கால தொற்றுநோய்களுக்கு எதிரான பின்னடைவை வலுப்படுத்தவும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அறிவிப்புகள் வெளியிட்டது.

பங்களாதேஷ், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருக்கும் தங்குமிடங்களில் அடிக்கடி நெரிசலான மற்றும் சுகாதாரமற்ற நிலைமைகளின் மீது கோவிட்-19 பரவல் கவனத்தை ஈர்த்தது.

இந்த புதிய தரநிலைகளில் ஒரு அறையில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை 12 ஆகக் கட்டுப்படுத்துதல், என்-சூட் கழிப்பறைகள் மற்றும் ஒரு பிரிவிற்கு 120 ஊழியர்கள் மட்டுமே தங்கும் வசதிகளும் ஆகியவை அடங்கும். பகிரப்பட்ட வசதிகளைத் தவிர்த்து, வசிக்கும் இடம் ஒரு குடியிருப்பாளருக்கு 3.5 முதல் 4.2 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி MOM தரப்பில் வந்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கி இருக்கும் டார்மெண்ட்ரியை பரிசோதித்தாலே இதை போன்ற பிரச்னைகளை தடுக்கலாம் என்பது ஊழியர்களின் கருத்தாக இருக்கிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts