சிங்கப்பூரில் OCBC வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் மோசடி செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கும் போது, தவிர்க்க முடியாத அவசரநிலை ஏற்பட்டால், அவர்களின் தங்களது அனைத்து வங்கிக் கணக்குகளையும் உடனடியாக முடக்க முடியும் என்று OCBC வங்கி இன்று புதன்கிழமை (பிப்ரவரி 16) அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் 1800-363-3333 என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணை அழைத்து “8” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த “Kill Switch”-சை செயல்படுத்தலாம் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் மாதத்திற்குள், அவர்கள் இங்குள்ள அனைத்து 500 OCBC ஏடிஎம்களை பயன்படுத்தி தங்கள் கணக்குகளை முடக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏடிஎம் அணுகல், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் டிஜிட்டல் பேங்கிங், அத்துடன் OCBC Pay Anyone ஆப் அணுகல் உள்ளிட்ட அனைத்து Savings மற்றும் Current கணக்குகளையும் வாடிக்கையாளர்கள் உடனடியாக முடக்குவதற்கு கில் சுவிட்ச் அனுமதிக்கிறது என்று OCBC கூறியது.
மேலும் இந்த சுவிட்ச் செயல்படுத்தப்பட்ட பிறகு, டிஜிட்டல் முறையில், ஏடிஎம் மூலமாகவோ அல்லது வங்கிக் கிளைகளின் மூலமாகவோ எந்தப் பரிவர்த்தனையும் செய்ய முடியாது. தொடர்ச்சியான அல்லது முன் ஏற்பாடு செய்யப்பட்ட நிதி பரிமாற்றங்களும் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.