TamilSaaga

சிங்கப்பூரில் எந்த துறையில் வேலை பார்க்க Skilled Test அவசியம்? எந்த துறைக்கு Skilled Test தேவையில்லை?

உலகின் பல நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கு. இன்னும் அதிகமான ஆட்கள் வேலைக்கு தேவைப்படுகிறார்கள். தொழிலாளர்கள் முதல் பெரிய அலுவலர்கள் வரை ஏராளமான மக்கள் இங்கு வேலைக்கு வருகின்றனர்.

அப்படி வருபவர்கள் வெவ்வேறு விதமான கல்வி பின்புலத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்க்கு தகுந்தவாறு வேலைகளுக்கு விண்ணப்பிப்பார்கள். அப்படி விண்ணப்பிக்கப்படும் வேலைகளுக்கு பல்வேறு விதமான ஆவணங்கள் மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் அவசியம்.

அதில் முக்கியமான ஒரு சான்றிதழ் தான் Skilled Certificate! சிங்கப்பூருக்கு கட்டிட வேலை மற்றும் கப்பல் வேலை போன்றவற்றிற்கு வரும் தொழிலாளர்களுக்கு இந்த சான்றிதழ் கட்டாயம் தேவை!

இதில் இரண்டு படிநிலைகள் உண்டு Basic Skilled மற்றும் Higher Skilled. இந்தச் சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் மட்டுமே வழங்கப்படும். பயிற்சி பெற்ற நபரை தேர்வுக்கு உட்படுத்திய பின்னரே இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.

எந்தெந்த வேலைகளுக்கெல்லாம் இந்த சான்றிதழ் அவசியம்?

1. கட்டுமானம் சார்ந்த தொழில்
2. கப்பல் பணி
3. மருத்துவம் சார்ந்த பணிகள்
4. பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள்

முதலில் கட்டிட வேலைகளில் பணிபுரிவோருக்கு welding, carpending, Plumbing மற்றும் Electrical போன்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் ஏராளமான பயிற்சிகள் உள்ளன. அந்தந்த பிரிவுகளில் தேர்ந்தவராக இருக்க குறிப்பிட்ட வருட அனுபவம் மற்றும் இந்த Skilled Test சான்றிதழ் போன்றவை அவசியம்.

கப்பல் பணிகளில் welding, Electrical, Maintenance போன்ற பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இது குறித்த விரிவான தகவல்கள் நமது தமிழ் சாகா பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
https://tamilsaaga.com/jobs/how-construction-site-workers-are-hired/

மருத்துவம் சார்ந்த துறைகளில் இது போன்ற சான்றிதழ்கள் தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும். ஒவ்வொரு மருத்துவ பணியாளர்களுக்கும் தனித்தனியான தேர்வுகள் நடத்தப்படும். தேர்ச்சி பெறும் நபர்கள் அங்கு உள்ள மருத்துவ அமைப்புகளில் பதிவு செய்யப்பட்டு பின்னர் வேலைக்கு அமர்தப்படுவர்.

இதனைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள https://www.healthprofessionals.gov.sg/ என்ற இணையத்தைப் பார்வையிடவும்.

பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்களுக்கு முதலில் FEE எனப்படும் Fundamental Engineer Examination-ல் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே அவர் தொழில் ரீதியாக பொறியாளராக அறியப்படுவார். பின்னர் மேற்கொண்டு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவரவர் வேலைகளைப் பொறுத்து விண்ணப்பிக்கப்படும்.

இதனைக் குறித்த முழு தகவல்களுக்கு https://www1.peb.gov.sg/requirements/ என்ற இணையத்தைப் பார்வையிடவும்.

மேலும் skilled Test அவசியமில்லாத துறைகளும் சிங்கப்பூரில் உண்டு. கிழ்கண்ட ஏதேனும் ஒரு துறையில் நீங்கள் பணிபுரிபவராக இருந்தால் உங்களுக்கு skilled Test அவசியமில்லை. அதற்கான கல்வித்தகுதி மற்றும் அந்தந்த துறை பணியாளர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ள ஆவணங்கள், ஊதியம் போன்றவை சரியாக இருந்தால் போதுமானது.

1. நிர்வாகம் தொடர்பான பணி
2. வணிகம்
3. சேவைத் துறை (Service Department)

நிர்வாகம் தொடர்பான பணிகளான ஆட்சேர்ப்பு, மேலாண்மையாளர் போன்ற பணிகளுக்கு எந்தவிதாமா Skilled Test-களும் அவசியமில்லை.

வணிகம் மற்றும் அது தொடர்பான பணிகளுக்காக சிங்கப்பூர் வரும் யாவருக்கும் எந்த விதமான skilled test-ம் அவசியமில்லை.

ஹோட்டல் பணியாளர், மேலாளர் மற்றும் ரெஸ்ட்டாரெண்ட் பணியாளர்கள் போன்ற சேவைத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் Skilled Test அவசியமில்லை.

குறிப்பாக திறன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் எந்த பணியாளர்களுக்கும் சிங்கப்பூர் சட்டப்படி அந்ததந்த துறைகளில் தேர்ந்தவர் என்ற Skilled Test Certificate அவசியம். மேலும் கல்வி மற்றும் அனுபவம் சார்ந்த வேலைகளுக்கு இந்த Test அவசியமில்லை.

இந்த சான்றிதழைப் பெற பயிற்சியை முறையாக முடித்து அதில் வைக்கப்படும் தேர்வில் வெற்றிபெற வேண்டும். இதற்கான பல பயிற்சி மையங்கள் பல்வேறு நாடுகளில் உள்ளன. அவை அனைத்தும் அந்தந்த துறைகளுக்கான அரசாங்க அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டவை. சிங்கப்பூர் தவிர சொந்த நாடுகளில் இது போன்ற பயிற்சிகளை பயில்வோர் அது குறித்த முழு தகவல்களையும் அறிந்துகொண்டு அது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையமா என உறுதி செய்தபின் பயிற்சியில் சேர வேண்டும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts