சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு அல்லது பணி அனுமதிச் சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கான நிபந்தனையாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து சிங்கப்பூரில் உள்ள வெகு சில முதலாளிகள் Kickbackகளை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகின்றது. கிக்பேக் என்பது வேலை அனுமதிக்கு பணம் கோருதலாகும். இவ்வாறு வேலை அனுமதிக்கு பணம் கோருவது சிங்கப்பூரை பொறுத்தவரை கடுமையான குற்றமாகும்.
இவ்வாறு பணம் வசூலித்தவர்கள் மீது இதையும் படியுங்கள் : உலகின் மிகச் சிறிய குழந்தையை காப்பாற்றி சிங்கப்பூர் மகத்தான சாதனை – யாருக்கும் கிடைக்காத பெருமை!
சிங்கப்பூரிலுள்ள San Tong Engineering பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சில புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் அவர்களது Work Pass விண்ணப்பங்களுக்கு பணம் பெற்றதாக MOM தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் Director Chen Shiqi என்பவர் அந்நிறுவனத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் 1000 வெள்ளி முதல் 3000 வெள்ளி வரை Work Pass விண்ணப்பத்திற்கு பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த மனிதவள அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி Director Chen Shiqi என்பவருக்கு 31 வார சிறை மற்றும் 22,000 வெள்ளி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அந்த நிறுவனத்தின் Director Chen Shiqi மற்றும் அந்த நிறுவனம் தற்போது புலம்பெயர்ந்து தொழிலாளர்களை பணியமர்த்துவதிலிருந்து தடையும் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள வெகு சில நிறுவனங்களே இதுபோன்ற தவறுகளை ஈடுபடுவதால் நிச்சயம் மனிதவள அமைச்சகத்தின் இந்த முடிவு அவர்களுக்கு ஒரு சாட்டையடியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.