சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இருந்து தமிழகம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கு இடையே பல விமான சேவை நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கப்பூரில் Omicron பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் சிங்கப்பூர் தனது VTL சேவைகள் வழியாக சிங்கப்பூருக்குள் வர தற்காலிக தடையை விதித்தது. ஆனால் அந்த தடையும் கடந்த ஜனவரி 20 இரவு 11.59 மணியுடன் முடிவடைந்துள்ளது. சிங்கப்பூரில் பதிவாகும் புதிய Omicron வழக்குகளில் 70 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்களிடையே தான் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகச் சிறிய குழந்தையை காப்பாற்றி சிங்கப்பூர் மகத்தான சாதனை – யாருக்கும் கிடைக்காத பெருமை!
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர் தமிழகம் என்று இருமார்கமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை அளித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தான் இந்திய அளவில் அதிக விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது. மேலும் தற்போது VTL சேவை திறக்கப்பட்டுள்ளன நிலையில் பலர் சிங்கப்பூர் வர விமான டிக்கெட்களை புக் செய்து வருகின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் திருச்சி – சிங்கப்பூர் செல்ல அதிக அளவில் மக்கள் டிக்கெட்களை புக் செய்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதற்கு டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்டுள்ள நிலையில் அதிக வேகத்தில் சிங்கப்பூருக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் சீன புத்தாண்டு சமயத்தில் பல தளர்வுகள் வழங்கப்படும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் அதி வேகமாக மார்ச் மாத டிக்கெட்கள் புக் செய்யப்படுகின்றன. மேலும் இந்த திருச்சி – சிங்கப்பூர் பயணத்திற்கு 7266 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை பொறுத்தவரை புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு டிக்கெட் cancel செய்தால் refund கிடைக்கும் என்ற காரணத்தால் மக்கள் அதிக அளவில் டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். ஆகவே மார்ச் மாதத்தில் சிங்கப்பூர் செல்ல திட்டமிடுபவர்கள் எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் தங்கள் டிக்கெட்களை புக் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.